பக்கம்:மாவிளக்கு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

噪 கேப்டன் பம்கின்ஸ் 47

எந்த நாளில் புறப்பட்டால் செவ்வாய்க் கிரகத் திற்கு எளிதில் சேர முடியும் என்பதைப் பற்றி ஆராய்ந்து அதற்குரிய நாள், மணி, நிமிஷம் எல்லாவற் றையும் பம்கின்ஸ் முன்னமேயே கணித்து வைத்திருந் தான். அத்ன்படியே அவன் ராக்கெட் வானே நோக்கிப் புறப்பட்டது. அமெரிக்காவில் நவாடா இராச்சியத்தி லுள்ள பாலேவனத்தைச் சேர்ந்த ஒரிடத்திலிருந்து மூன்ரும் பேருக்குத் தெரியாமல் இந்த முயற்சி கடந்தது. மின்னல் வேகத்தில் ராக்கெட் வானிலே பாய்ந்ததைக் கண்டு எனக்குக் கொஞ்சநஞ்சமிருந்த ஐயமும் பஞ்சாய்ப் பறந்துவிட்டது. என் நண்பன் நிச்சயம் தனது முயற்சியில் வெற்றியடைவான் என்று தைரியமடைந் தேன். -

நான் பாலைவனத்திலே தனி யாக வானெலிப் பெட்டியை வைத்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருந் தேன். அரை மணிக்கொரு தடவை எனக்கு அதன் மூலம் சேதி வந்தது. பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தையெல்லாம் கடந்து பரவெளியில் ராக்கெட் பாய்ந்துகொண்டிருந்தது. எதிர்பார்த்தபடியே குறித்த காலத்தில் இப்பொழுது கான் ஒரே அந்தகாரமான இருள் மண்டலத்திலே புகுந்துகொண்டிருக்கிறேன். அடடா, இங்கிருந்து பூமியைப் பார்ப்பது எத்தனை ஆச்சரியம் !’ என்று ஒரு சேதி ஒலித்தது. அதுதான் கடைசியாக எனக்குக் கிடைத்த சேதி. அதற்கு மேலே பம்கின்ஸுடன் தொட்ர்பு அற்றுப் போய்விட்டது.

இப்படி நேருமென்று அவன் எச்சரிக்கவில்லை. அதனால் திடீரென்று எனக்குக் கவலேயுண்டாயிற்று. பாலைவனத்திலேயே இரண்டு நாள் காத்துக் கிடந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/49&oldid=616085" இலிருந்து மீள்விக்கப்பட்டது