பக்கம்:மாஸ்டர் கோபாலன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8 வேண்டிய நீங்களோ என்னே விரட்டியடிக்கிறீர்கள். இது நீதியா ? நேர்மையா ? நியாயந்தானா ?”

      "அது சரி. அனுமதியில்லாமல் நீ எப்படி வந்தாய் ?"
     "எங்கும் நினைத்தவுடன் செ ல் ல க் கூ டி ய எனக்கு அனுமதி வாங்க நேரமேது ? நீங்களே சொல்லுங்கள் !”
    "அது சரி, இந்தியாவிலிருந்து எப்பொழுது வந்தாய் ?
    "அரைமணி நேரத்திற்கு முன் புறப்பட்டேன். இப் பொழுது உங்கள் எதிரிலே நிற்கிறேன் !"
   "ஏய் பொய் சொல்லாதே!"பறவைக் கப்பலில் பறந்து வந்தாலும் ஐந்து நாட்களாகும். அரைமணி நேரத்தில் வந்த தாக யாரிடம் கதை கூறுகிறாய் ?”
  "கதையில்லே மந்திரியாரே ! இதோ உங்கள் கண் முன்னே வந்து நிற்கிறேன். நீங்கள் ஏன் நம்ப மறுக்கிறீர்கள்?"
  " அது சரி நீ எதற்காக இங்கு வந்தாய் ?"
  "ஒன்றுமில்லை, தங்கள் நினைவு வந்தது, பார்த்துவிட்டுச் செல்வோமே, நாம் தான் நினைத்தபோது நினைத்த இடத் திற்குப் போக முடிகிறதே என்று இங்கே பறந்து வந்தேன்".
   "ஸ்டுப்பிட் ! மீண்டுமீண்டும் பொய்யான வார்த்தை களைப் பேசுகிறாய். வெளியே போய்விடு. என் வேலையைக் கெடுக்காதே" என்று மிகுந்த கூச்சல் போட்டு அதட்டினார்.  
 
"துரையவர்களே, நான் தங்களைச் சில கேள்விகள் கேட்கலாமென்று நினைக்கிறேன், தயவு செய்து பதில் சொல் வீர்களா ?"
  "போகிறாயா இல்லையா ? ஏய்! யாரங்கே காவல்! என்று இரைந்தவுடன் இனி இங்கிருப்பது சரியில்லை. மரியா தையாக வெளியேறி விடவேண்டுமென்று கோபாலன் நினைத் தான்.