பக்கம்:மாஸ்டர் கோபாலன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

1 3 பிறகு விமானியை அழைத்துப் பயப்படாமல் இருக்கும்படி தைரியப்படுத்தினான். அவரும் கோபாலனுடைய சொல்லை நம்பி அருகில் வந்து பயப்படாமல் மறுபடி பேசத் தொடங் கினார்.

    "மாஸ்டர் கோபாலன் அவர்களே ! தங்களைப் போன்ற மாயாவித்தைக் காரர்கள் இருப்பது இந்தியநாட்டின் தவப் பயனாகும். என்றாலும் இருப்பது தெரியாமல் மூலை முடுக்கு களில் இருப்பது இந்த நாட்டின் துரதிர்ஷ்டமாகும். எனினும், இன்று நான் தங்களைச் சந்திக்க நேர்ந்தது பாரத நாட்டின் பாக்கியமாகும்.
        முதலாவதாக நமது நாட்டின் அரிசிப் பஞ்சம் ஒழிய வேண்டும். அதற்குத் தங்கள் ஒத்தாசை வேண்டும். அதைத் தீர்த்து வைப்பீர்களானால் ஆகா நாற்பது கோடி மக்களும் மாஸ்டர் கோபாலன் நீடுழி வாழ்க! என்று கூவி முழக்கமிடு வார்கள் ! எவ்வளவு இன்பமான காட்சி !...” என்று அந்த விமானி பேசிக் கொண்டு நிற்கும்போதே, வேதாளத்திடம் கோபாலன் சொல்லி, அது அங்கே, ஒரு மலைபோல் அரிசி யைக் குவித்துவிட்டது. உடனே அங்கிருந்த மக்கள் அரிசியை அள்ளி அள்ளி விமானங்களுக்குள் கொட்டினார்கள். பிறகு பல விமானிகள் வந்து அந்த விமானங்களை ஓட்டிக் கொண்டு இந்தியாவின் பல பாகங்களுக்கும் புறப்பட்டுச் செல்லலானார்கள்.

கோபாலனுடன் பேசிக்கொண்டிருந்த தலைமை விமானி, கோபாலனின் உதவிக்காக மிகவும் மெச்சிக்கொண்டு,

   " மாஸ்டர் கோபாலன் ! தாங்கள் அவசியம் என்னுடன் டில்லி வர வேண்டும் அங்கே நமது இந்தியநாட்டு மந்திரி களுக்குத் தங்களை அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும். பூமிக்கடியிலே தண்ணீரைக் கண்டுபிடிக்கும் ஒரு மகானுக்கு