பக்கம்:மாஸ்டர் கோபாலன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

5 இருந்தது. அதன் கண்கள் எரிகின்ற கொள்ளிக்கட்டை போல் தகதகவென்று இருந்தன. அதன் மூக்கோ குடை மிளகாய் போல் நீண்டிருந்தது. வாய் அகண்டு விரிந்து உதடு தடித்து மிக விகாரமாக இருந்தது. காதே இல்லாதது போல் தோன்றிய அந்த வேதாளத்திற்கு வயிறு வண்ணான் சால்போல் பெருத்து, அகப்பட்டதை அப்படியே கபளிகரம் செய்து விடக்கூடிய மாதிரி இருந்தது. மொத்தத்தில் பார்ப் பதற்கு அசிங்கமாகவும், சிறுவர்கள் பயப்படும்படியாகவும் விளங்கியது அந்த வேதாளம். கோபாலன் அதைக் கண்டு கொஞ்சங் கூடப் பயப்பட வில்லை. தட்டென்று தரையைக் காலால் உதைத்து, "ஏய் ! நீ யார் ? “ என்று அதட்டினான் கோபாலன். "தயவு செய்து கோபித்துக் கொள்ளாதீர்கள். நான் உங்கள் அடிமை, முருங்கை மரத்து வேதாளம். நீங்கள் என்னை என்ன செய்யச் சொல்கிறீர்களோ அதைச் செய்யக் காத்துக் கிடக்கிறேன்" என்றது வேதாளம். " ஓகோ ! சரி சரி ! நீ இங்கே எப்படி வந்தாய் ? அதைச் சொல் முதலில் ! “ கோபாலன் பெரிய நீதி மன்றத் தலைவனைப் போல, துப்பறியும் சப் இன்ஸ்பெக்டரைப்போல அதட்டிக் கேட்டான். "இந்த மரத்திலே நான் கு டி யி ரு ப் ப து தெரிந்தும் யாரொருவர் கொஞ்சங்கூடப் பயப்படாமல் தைரியமாக வந்து இங்கே இந்த மரத்தடியில் படுத்துக்கொண்டு கவலையில்லா மல் தூங்குகிறார்களோ அ வ ர் க ள் என் தலைவர் ஆவார். அதன்படி தாங்கள் என் தலைவர். நான் தங்கள் அடிமை என் வீரத்தலைவரே ! என்னால் தங்களுக்காக வேண்டிய காரியம் ஏதாவது இருக்கிறதா ? ' வேதாளம் பணிந்து பேசப் பேசக் கோபாலனுடைய குரல் தடித்தது. இளைத்தவனே க் க ண் டா ல் எதிர்த்துப்