உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மிசா கால கொடுமைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 எமதுகொட்டடியில் கீழ்த்தளத்திலிருந்தோர் புதியவரவுகள் தம் கொட்டடி வழியே நடத்திச் செல்லப்படும்போது அவர்களது பெயர்களை இரைந்து கூறினார்கள். மாலைப்போதில் நாங்களெல்லாம் ஓரிடத்தில் கூடி வழி பாட்டு பாடல்களை பாடுவதும், மதம் அல்லது நாட்டுப்பற்று தொடர்பான ஏதேனும் ஒரு பொருள் பற்றி யாரேனும் ஒருவர் சொற்பொழிவு நடத்துவது எமக்கு வழக்கம். பிப்ரவரி 2 அன்று இரவு18 - 30 மணிவாக்கில் நாங்கள் வழக்கமாக வழிபாட்டுப் பாடல்களைப் பாடிக் ரெகண்டும் பேசிக் கொண்டும் இருக்கையில், சிலர் அமைதி இழந்தனர். எங்களில் தூரத்தே கூச்சல்களும் ஓலங்களும் கேட்டன. பலர் சாரளரம் நோக்கி விரைந்தோம். அந்தச்சாளரங்கள் தரை யிலிருந்து இரண்டடி உயரமுள்ளவை. கிழக்குப் பார்த்தவை. தனித்த கொட்டடியில் எங்கள் கொட்டடியிலிருந்து ஏறத் தாழ ஐம்பது அடி தொலைவில் உள்ளது. எங்கள் சாரளத்தி லிருந்து பார்த்தால் தெளிவாகத் தெரியும், உட்பகுதியையே நாங்கள் பார்க்கமுடியும், நாங்கள் எல்லோரு எங்கள் உரையாடலைத் திடீரென நிறுத் தினோம். அந்தஅமைதியினூடே கூச்சல்களையும் ஓலத்தையும் நாங்கள் தெளிவாகக் கேட்க முடிந்தது. அப்போது அண்டைக் கொட்டடியில் நாங்கள் கண்ட காட்சியை - எங்களில் யாராலும் ஒரு போதும் மறக்கவே முடி யாது. அந்தத் தனி கொட்டடியின் இருதளத்திலும் சுமார் ஆறு ஆறு அறைகளிருந்தன கீழ்த்தள அறைகளின் கதவுகளை ஒன் றடுத்து ஒன்றாய் ஒரு கூட்டத்தவர் திறப்பதை கண்டோம்! அந்த அறைகளின் உள்ளே எரிந்தகுறைந்த வெளிச்ச மின் விளக்குகளைக் கொண்டு, அறைக்கதவுகள் திறக்கிப்படுவதையும் ஏறத்தாழ முப்பது அல்லது அதற்கு மேற்பட்டோர் நுழைவதை யும் காண முடிந்தது. அவர்களுள் சிலர் காக்கி உடையும் மற்றையோர் வெள்ளை உடையும் உடுத்தியிருந்தார்கள். அவர் கள் சிறைக்காவலாளிகளும் தண்டனைக் காவலாளிகளும் ஆவர்.