உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மிசா கால கொடுமைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அது உண்மைதானா என்று விசாரிக்க இப்போது இரண்டு பேரும் இல்லை என்றாலும் கூட நான் அந்த நேரத்தில் பல பேரிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறேன். கவிஞரிடமும் சொல்லியிருக்கிறேன். - இப்போது அதைச்சொல்லக்காரணம் - மொழிப் பிரச்னைப் பற்றி மிக வேகமாகப்பேசப்படும் இந்த நேரத்தில் நான் இதைச் சொல்வதால் தமிழ்பயிற்றுமொழி கூடாது என்கிற வாதத்தை வைக்கிறேன் என்று யாரும் இதை அரசியல் நோக் கத்தோடு பார்க்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டு கூறு வேன் பெருந்தலைவர் காமாரசரின் எண்ணமெல்லாம் இந்தி எப்படியும் தமிழகத்தில் நுழைந்து தமிழின் இடத்தைப் பிடித்து விடக்கூடாது என்பதிலே அவர் எந்த அளவுக்கு அக்கறை யாக இருந்தார் என்பதை நினைவு படுத்துவதற்காகத்தான் இதைச்சுட்டிக்காட்டுகிறேன். ஆங்கிலத்தை அவசரப்பட்டு அகற்றிவிடுவோமேயானால் அந்த இடத்தில் வேறு ஒன்று வந்து உட்கார்ந்துவிடுவது இந்தி யாகத்தான் இருக்கும், ஆகவே அதற்கு நாம் இடம் தந்துவிடக் கூடாது என்று காமராசர் கருதினார். தமிழ்ச் சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற உணர் வும் அதே நேரத்தில் இந்தியத் திருநாட்டில் ஒற்றுமையை - ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்ற பேருள்ளம் கொண்ட பேரறிவாளர் பெருந்தலைவர் காமராசர் தமிழகத்தில் எப்படிப்பட்ட புரட்சிகரமான திருப்பங்களையெல்லாம் செய்தார் என்பதை அவருடைய வரலாற்றைப் படிப்பவர்களுக்கு நன்றாகப் புரியும். தமிழ் நாட்டில் மூதறிஞர் ராஜாஜி ஒரு கல்வித்திட்டத்தை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாமல், அது உரிய திட்டம்தான் இந்த நாட்டு இளம் பிள்ளைகள் ஏற்றுக் கொள்ளத் தக்க திட்டம்தான் என்று அந்தத் திட்டத்தை அறிமுகப்படுத் திய பொழுது நாடு ஒரு சேர எதிர்த்தது. அந்த நேரத்தில் காமராசர் - நாட்டு மக்களின் உள்