உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மிசா கால கொடுமைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அப்படி நேசிக்காதவனெல்லாம் தமிழனல்ல என்ற அந்த அடிப்படையிலேதான் நான் இதைச் சொல்லுகிறேன். ஒரு தமிழன் இன்னொரு தமிழனை எப்படி நேசிக்கிறான் அதுவும் ஒரு பெரும் தமிழன் இன்னொரு பெருந்தமிழனை நேசித்த வரலாற்றுக்காகத்தான் இதை எடுத்துக் காட்டு கின்றேன். - அப்படிப்பட்ட பெருந்தன்மையோடு காமராசர் முதலமைச் சராக வரவேண்டும் வந்த அந்தப் பதவி நிலைக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு அரசியல் மாறுபாடுகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு கழகம் அந்தந் தேர்தலில் அவருக்கு ஆதரவை நல்கியது. - க அதற்குப் பிறகு தமிழக முதலமைச்சராக அவர் பொறுப் பேற்று - நண்பர் திருமாறன் இங்கே எடுத்துக் காட்டியது போல தமிழகத்தில் ஒரு புதிய பொற் காலத்தை உருவாக்கிக் காட்டிய பெருமைக்குரியவராக காமராசர் திகழ்ந்தார். அதன் பின்னர் அவருடைய பொதுவாழ்வில் எவ்வளவு பெரிய ஏற்றங்களைப் பெறவேண்டுமோ அவ்வளவு ஏற்றங்களை யும் பெற்றார். தமிழின் பெருமை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். அது மாத்திரமல்ல அ.இ.கா.க. மாநாட்டில் தமிழி லேயே உரைநிகழ்த்தினார். காமராசருக்கு ஆங்கிலத்தில் சரள மாகப் பேச முடியாவிட்டாலும் ஆங்கிலத்தில் படிக்க இயலும் அப்படிப்பட்ட உரையைக்கூட காங்கிரஸ் கட்சி மாநாட்டில் தமிழிலேதான் ஆற்றினார். இப்படி ஒரு தமிழன் இந்தியத் திருநாட்டில் ஓங்கு புகழ் எய்தியது கண்டு அன்றைக்கே தமிழகம் மகிழ்ச்சிப் பெருங் கடலில் ஆழ்ந்தது. ரஷ்யாவுக்கு காமராசர் சென்றபொழுது அண்ணாவைப் பார்த்து நிருபர்கள் கேட்டார்கள். ரஷ்யாவுக்குச் செல்கிறாரே காமராசர் அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்றுகேட்டார்கள்.