உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மிசா கால கொடுமைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 காமராசருக்கு தி. மு. கழக ஆட்சியின் மீது அவ்வளவு ஆசையா? இல்லை! தி.மு.கழக ஆட்சி நீடிக்க வேண்டும் என்று விரும் பினாரா. இல்லை! கருணா நிதிதான்தொடர்ந்துமுதலமைச்சராக இருக்கவேண்டு மென்று ஆசைப்பட்டாரா? இல்லை! அவருடைய ஆசை நிறுவனகாங்கிரஸ்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான்! அதை யாரும்தடுத்திட இயலாது - இது அவரது உரிமை! கலைப்புக்கு எதிரானவர் ஆனால் தி.மு. கழக ஆட்சி கலைக்கப்படக் கூடாது என்ற கருத்தைக் கொண்டிருந்தார் என்றால் என்ன காரணம்? மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி மக்களால் ஐந் தாண்டுகள் அந்த ஆட்சி பொறுப்பில் இருக்கலாம் என்று.தீர் பளிக்கப்பட்ட பிறகு அந்த ஐந்தாண்டுகளில் ஆட்சியின் தவறு களைச் சுட்டிக்காட்டுகின்ற பொறுப்பினை நாம் ஏற்றுக்கொண்டு மக்களை நம் வயப்படுத்தி ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஜன நாயக வழியில் தேர்தலில் ஆட்சியை மாற்றிவிட்டு புதிய ஆட்சியைக் கொண்டு வருவதுதான் முறையே தவிர இடையில் ஒரு ஆட்சி யைக் கவிழ்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று காமராஜர் கூறியகாரணத்தினால்தான் அவர் உயிரோடு இருக்கு வரை அந்தக் காரியம் நடைபெறவில்லை என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். ஏனென்றால் நான் அப்போது முதலமைச்சர் பொறுப்பில் இருந்ததால் டில்லி வட்டாரத் தகவல்களை - சென்னை வட்டா ரத்து தகவல்களை அறிந்து கொள்ளக் கூடிய இடத்திலே இருந் தேன். தி.மு.கழக ஆட்சியைக்கலைக்கலாமா என்று டில்லி யிலிருந்து யோசனை கேட்ட போதெல்லாம் கூடாது கென்னமோ கருணாநிதி நெருங்கியவன் என்ற முறையில் சொல் எனக்