உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மிசா கால கொடுமைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவரால் எதுவும் செய்ய முடியாத காரணத்தால் ஆடத் தெரியாத நடனக்காரி மேடைகோணல் என்று சொன்னதைப் போல, இவரால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாத காரணத்தால், ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார்கோயில் ஆண்டி என்பதைப் போல் அதிகாரிகள் மீது அதிகாரிகள் மீது இன்றைக்கு பழியைப்போடத் தொடங்கி இருக்கிறார், "நாங்கள் செய்கிற நல்ல காரியங்களையெல்லாம் அதிகாரிகள் கெடுக்கிறார்கள். அதிகாரிகள் ஊழல் செய்கிறார்கள்" என் று இன்று அதிகாரிகள் மீது பழியைப் போட்டு தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். இந்த ஒரு சம்பவம் போதாதா?மண்டை பிளக்கப்பட்டிருக் கிறார் கன்னியப்பன், ரத்தம் உடலெல்லாம் குபு குபுவென வழிய அதை புகைப்பட மெடுத்து போலீஸ் ஸ்டேஷனிலே காட்டி புகாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகும் போலீசா ரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை யென்றால் காவல் துறை யின் கைகளை இன்றைக்கு எம், ஜி. ராமச்சந்திரன் கட்டிப் போட்டிருக்கிறார். அவர்கள் நல்லவைகளைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அனுமதிக்கப்படவில்லை. காவல்துறை எதற்கு பயன்படுத்தப்படுகிறது? பத்திரிகைக் காரர்களை மிரட்ட பயன்படுத்தப்படுகிறது. போட்டி ஊர்வலம் நடத்தி, 10ஆயிரம் பேர்தான் வந்தார் கள் என்றாலும்காவல் துறையினர் பத்திரிகைக்காரர்களுக்கு செய்தி கொடுக்கிறார்கள். 50 ஆயிரம் பேர் என்று போடு. போடாவிட்டால், உன்னுடைய பத்திரிகை அலுவலகத்திற்கு மின்சாரம் நிறுத்தப்படும் என்கின்ற அளவிற்கு பத்திரிகைக் காரர்கள் மிரட்டப் படுகிறார்கள். பாவம் என்ன செய்வார்கள் பத்திரிகைக்காரர்கள்! லட்சக்கணக்கில் வந்த நம் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கில் வந்தார்கள் என்றும், 10 ஆயிரம் பேர் வந்த அவர்களுடைய ஊர்வலத்தை 50 ஆயிரம் பேர்கொண்ட ஊர்வலம் என்றும்