பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் '91 அரப்பா: உனது நாடு பெலித்தியர்களுக்கு அடிமைப்பட வில்லையா? உன் அறச் சான்ருேர்களே உன்னை அடிமைபோல் எங்களிடம் ஒப்புக்கொடுக்கவில்லையா? இது ஒன்றே நீ கொலைகாரன் கொள்ளைக்காரன் என்று காட்டப் போதுமே. அவர்கள், உன்னை ஒபபந்தத்தை மீறுபவன் என்று எங்க ளிடம் கைதிபோல் ஒப்படைத்தனரே உனக்கு எந்தத் தீங்கும் செய்யாத அசுகலோன் ஊராரில் முப்பதுபேரைக் கொன்று அவர்களின் உடைமைகளை நீ கொளளையிட வில்லையா? நீ ஒப்பந்தத்தை மீறியதைக கேள்விப்பட்டபோது, பெவித்தியர்கள் தங்கள் படையுடன் அங்கு உன்னை மட்டுமே தேடிச்சென்றனர். அவர்கள் அப்படிச் செல்லும்போது யாருக்கும் தீங்கு விளைவிக்கவில்லை. இசுரவேலரின் சொத்துகளைக் கொள்ளையிடவுமில்லை. சிம்சோன்: பெலித்தியர்களிடையே ஒரு பெண்ணை என் மனைவியாகத் தேர்ந்தெடுத்தேன். அதுவே நான் அவர்களுக் குப் பகைவன் அல்லேன் என்பதை மெய்ப்பிக்கவில்லையா? எனது திருமண விருந்துகூட உங்கள் நகரத்திலதான் ஏற்பாடு செய்யப்பட்டது. இவையனைத்துமிருந்தும் உங்களில் சில தந்திரமான அரசியலாளர், நண்பாகள், விருந்தினர்கன் என்ற போர்வையில விருந்துக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் முப்பது பேர் எனக்காகக காத்திருந்தனர். நான் போட்ட புதிரின் கமுக்கத்தை என் மனைவி என்னிடமிருந்து தெரிந்து அவர்களுக்குச் சொல்லவில்லையாளுல் உன்னைக் கொன்றுபோட்டு விடுவோம்' எனறு அவளை அச்சுறுத்தி னர். அவர்களே நான என் எதிரிகளாய்க் கண்டபோது என் எதிரிகளைப்போலவே அவர்களைக் கொன்றேன், அவா களின் ஆடைகளைப் பறித்தேன. சுருங்கக்கூறின், முள்ளை முள்ளால் எடுத்தேன். என் நாட்டு மக்கள் பெலித்தியர்களுக்கு அடிமைகள் என்று நீ சொன்னுய். அவர்கள் வல்லந்தத்தால் எங்களே அடிமையாக்கினர். வல்லந் தத்தை வல்லந்தததால் துரத்துவது தவறிலலை. நான் தனிததுச் செயல்பட வில்லை. ஒப்பந்தததை உடைத்ததும், பகைச் செயல புரிந்த தும் தனி ஆள் செய்த கிளர்ச்சி அன்று. கடவுளின் கட்டளைப்