பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் I 09 வில்லை. அரங்கம் மிகப் பெரியதாய் அறைவட்ட வடிவில் அமைந்திருந்தது. இரண்டே இரண்டு தூண்கள் மட்டுமே மண்டபத்தின் மகத்தான வளைவுகளைத் தாங்கி நின்றன. காட்சியைக் காண, அவரவர் தகுதிக்குத்தக்க இருக்கை களைக் கொண்ட சிறிய சிறிய அறைகள் இருந்தன. பொது மக்கள் செயற்பாடுகளை நின்றவண்ணம் கண்டு களிக்க மறு பக்கத்தில் திறந்த வெளியிருந்தது. இங்கு மதிற் சுவர் இல்லை. மக்கள் மேம்பலகைகளில் உட்கார்ந்துகொண்டும், மேடைகளில் நின்றுகொண்டும் பார்த்தனர். நானும் பிறர் கவனிக்காதவண்ணம் கூட்டத்திலிருந்து சற்று விலகி நின்று கொண்டேன். செயல்கள் தொடர்ந்தன. மக்களிடையே மகிழ்ச்சி பொங்கியது. நண்பகல நெருங்கியது. வருணனுக்கு இட்ட பலிகள் அவர்கள் உள்ளத்தை மகிழ்ச்சியால் நிரப்பியது. மதுவும, விருந்தும் அவாகள் மதியை மயக்கின. அவர்கள் வீர விளையாட்டுகளில் ஈடுபட்டனர். உடனே சிம்சோன் பொதுத தொண்டன் உடையில் கொண்டுவரப்பட்டான். அவன் முன்னே, முழவு முழங்க, குழலிசையோடு இசை வல்லோர் அணிவகுத்து வந்தனர். சிம்சோனின் இருமருங் கும், படைக்கலம் தாங்கிய காவலர்கள், வில்லாளர், குண்டு வீச்சாளர்கள், குதிரை வீரர்கள் புடைசூழ, படை தாங்கி யோர் முன்னும் பினனும் வர சிமசோன் அழைத்து வரப் பட்டான். சிம்சோனைக் கண்ட மக்கள் விண்ணதிர முழக்க மிட்டனர். தங்களின் மிகப் பெரிய பகைவன் சிம்சோனைத் தங்கள் அடிமையாய்த் தந்தமைக்காய், அவர்கள் தங்கள் மழைத் தெய்வத்தைப் புகழ்ந்தனர். சிம்சோன் அமைதியாக ஆனல் அச்சமின்றித் தான் செல்லவேண்டிய இடத்திற்குச் சென்ருன, குருடனயிருந்தும், மாந்த ஆற்றலுக்கு அப்பாற் பட்ட அற்புதங்களைச் செய்து காட்டினன். தொடக்கத்தில் மக்களால் நம்பமுடியாதவண்ணம், இமைப்பொழுதில், எவ்விதத் தயக்கமுமின்றி, அருஞ்செயல் பல புரிந்தான். அவனை எதிர் நிற்க எவனுக்கும் துணிவில்லை. இறுதியில், ஒர் இடைவேளையின் போது அவனை அவ்விரண்டு தூண்