பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமல்லன் சிம்சோன் சிம்சோன்: (தன் வழிகாட்டியிடம்) பார்வையிழந்த எனக்குச் சற்றுக் கைகொடு. வெயிலும் நிழலும் நிறைந்த இந்த மலைமுகட்டில், உடலுக்குகந்த இம் மணமிகுந்த காற்றை உட்கொள்ளவிடு. கைதியான எனக்கு மாவரைக் கும் பணியிலிருந்து ஒய்வு கிடைக்கும்போதெல்லாம், இங்கு நான் அமர்ந்து எனக்கு நானே ஆறுதல்கொள்வது வழக்கம். மற்ற வேளைகளில் சிறையில் குற்றவாளிகளோடு இருக்க வேண்டியவனாய் இருக்கிறேன். அங்குக் காற்றுக்கூட என்னைப் போல் சிறைப்பட்டுள்ளது. அந்தச் சூழலோ களையிழந்து, காரிருள் சூழ்ந்த, நலமற்ற சூழல். இம் மலைமுகட்டில் மட்டுமே, விடியலில் வீசும் இளங்காற்றில் சற்று ஆறுதல் அடைகிறேன். எனவே, என்னை இங்குச் சற்று இளைப்பாற விடு. இன்று பெலித்தியர்கள் தங்க ள் கடல் தேவின் வருணனு (Dagon)க்குப் பத்தியோடு விழாக் கொண் டாடுகிருர்கள். இந்நாளில் கடினமான வேலைகள் மேற் கொள்ளப்படுவதில்லை. எனவேதான் இந்த ஒய்வினையும், ஒய்வு நாளேயும் நான் நுகர்ந்துகொண்டிருக்கிறேன். இந்த ஒய்வு அவர்களின் மூடக் கோட்பாட்டால் எனக்குக் கிடைத் திருக்கிறது. எனவே, விழாக் கொண்டாடும் மக்களின் இரைச்சலோ, வேறு குறுக்கீடோ இல்லாத இந்தத் தனிமையை நான் விரும்புகிறேன். இங்கு என் மனத்தளவில் இல்லையானலும் உடல் அளவில் சற்று ஒய்வுகொள்கிறேன். ஏனெனில், நான் எப்படியிருந்தேன் இன்று எப்படியானேன் என்ற கசப்பான நினைவுகள் என் மனத்தை அமைதிபெற விடுவதில்லை. கடந்த கால நிலையின் நினைவுகள், நான் தனித் திருக்கும்போதெல்லாம், குளவிக் கூட்டம்போல் கூடிவந்து கொட்டி உள்ளத்தை ஒய்வறச் செய்கின்றன.