பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7发 மாமல்லன் சிம்சோன் உண்மையில் உனது முறை அல்லது முறையின்மை முடிவு இரண்டுமே துயருக்குரியது. கடவுளே! உனக்காகப் பாடுபட்டவர்களே நீ இப்படி நடத் தாதே! ஒரு காலத்தில் அவா கள் உன் உண்மை ஊழியர்களாய்ப் பெரும் பணியாற்றினர்களே! இந்த வேண்டு கோள வீளுனதே! ஏனெனில் நீ ஏற்கெனவே அவனைக் (சிம்சோனை) கடுமையாகத் தண்டித்துவிட்டாய். நான் வேண்டுவதெல்லாம் அ வ ன து இரகக நிலையை நீ சற்று நோக்கு. இந்த அல்லலிலிருந்து அவனை அமைதி அடையச் செய். இறப்பில் அவனது துயரங்கள் முற்றுப்பெறட்டும். இதை உன்னல் செய்யமுடியும். அவ்வண்ணம் செய்யவே நாங்கள் உன்னை வேண்டுகிருேம். சி ம் சோ னு க் கு நீ இறப்பைக் கொடு. ஆ! அங்கே வருவது யார்? (தீலியாள் வருவதைப் பார்தது) அவள் நிலத்தில் வாழும் ஓர் உயிரினமா? அல்லது நீர்வாழ்வினளா? பெண்போல் தோன்றுகிறதே. ஆரவள்? அலங்காரத்துடன் மனத்துக்குகந்த தோற்றத்தில் வருகிருள். கடலில் கப்பல் மிதந்துவருவதைபபோல் அவள் நம்மை நோக்கி நகர்ந்து வருகிருள். சாவன் தீவுக்குச் செல்லும் தர்சூசு கப்பலைப்போல் அவள் தோன்றுகிருள். காற்றில் விரிந்த பாய்களுடனும், படபடக் கும் கொடிகளுடனும் கப்பல் அசைந்து வருவதுபோல், மினுக்கு நடையுடனும், அழகிய ஆடை அணிகளுடனும் அவள வருகிருள். அவளைச் சுற்றி வெறி மணம் வீசுகிறது. பருவமடைந்த பணிப் பெண்கள் தொடர அ வ ள் வருகிருள். திருமணமான செலவச் செழிப்புமிக்க பெலித்திய பெண்போல் காணப் படுகிருள். இதோ அவள் அருகில் வந்துவிட்டாள். இப் போது அவளை நன்ருகப் பார்க்கமுடிகிறது. ஐயமின்றி அது உன் மனைவி தீலியாள்தான். சிம்சோன்: அவள் என் ம ன வி அல்லள். என்னைக் காட்டிக்கொடுத்தவள். அவளை என் பக்கத்தில் வரவிடா தீர்கள்.