பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

285

21

இருபத்தியோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் இந்திரா
சொன்ன

காணாமற் போன மனைவியின் கதை

“கேளாய், போஜனே! ஒரு நாள் காலை எங்கள் விக்கிரமாதித்தர் வெளியே புறப்பட்டுக்கொண்டிருந்தகாலை யாரோ ஒருவர் தலைவிரி கோலமாக வந்து அவருக்கு எதிர்த்தாற்போல் தயங்கித் தயங்கி நிற்க, ‘யார் நீங்கள், எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று விக்கிரமாதித்தராகப் பட்டவர் அவரை விசாரிக்க, 'நான் சிந்தாதரிப்பேட்டையிலிருந்து வருகிறேன். என் பெயர் நேற்றுவரை வெறும் நாராயணன்; இன்று நடுத்தெரு நாராயணன்!' என்று வந்தவராகப்பட்டவர் மனம் நொந்தவர்போல் சொல்ல, ‘ச்சூச்சூச்சூ! அப்படியா, என்ன சமாசாரம்?’ என்று தம் ‘ச்சூச்சூச்சூ'வைக் கேட்டு விரைந்து வந்த நாயை விரட்டி விட்டு விக்கிரமாதித்தர் கேட்க, 'ஐயோ, அதை நான் எப்படிச் சொல்வேன்?' என்று அவர் தன் தலையில் தானே அடித்துக் கொள்ள, விக்கிரமாதித்தர் அதைத் தடுத்து, ‘சும்மா சொல்லுங்கள்?’ என்று அவரை உசுப்ப, அவர் சுற்றுமுற்றும் பார்த்துத் 'திருதிரு' வென்று விழித்துக் கொண்டே சொன்னதாவது:

‘விஷயம் உங்களோடு இருக்கட்டும்; வேறு யாருக்கும் தெரிய வேண்டாம். நானும் என் மனைவியும் சீர்மிகு சிந்தாதரிப்பேட்டையிலே ஒரு சின்னஞ்சிறு வீட்டை