பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/293

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

22

இருபத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பங்கஜா சொன்ன

ஒரு கூஜா கதை

"கேளாய், போஜனே! ஒரு நாள் இரவு மிஸ்டர் விக்கிரமாதித்தர் தம்முடைய நண்பர் ஒருவரை 'நீலகிரி எக்ஸ்பிர'ஸில் ஏற்றிவிட்டு வருவதற்காக ஸென்ட்ரல் ஸ்டேஷனுக்குச் செல்ல, அதுகாலை யாரோ ஒரு சிறுவன் அங்கிருந்த பிளாட்பாரத்தில் கையில் கூஜாவுடன் குழாயடியில் நின்று 'ஓ'வென்று அழுதுக்கொண்டிருக்க, ‘என்ன தம்பி, என்ன?' என்று விக்கிரமாதித்தராகப்பட்டவர் அவனை விசாரிக்க, 'அதோ போகிறார் பார், அவர் என்னை அடித்துவிட்டுப் போகிறார், ஸார்!' என்று சிறுவனாகப் பட்டவன் சற்றுத் தூரத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு டெரிலின் சட்டை ஆசாமியைச் சுட்டிக் காட்ட, 'அவர் எதற்காக அடித்தார் உன்னை?' என்று விக்கிரமாதித்தர் பின்னும் கேட்க, ‘கதையைக் கேளுங்கள், ஸார்!' என்று அவன் பின்னும் சொன்னதாவது:

‘நான் இந்தக் குழாயடிக்கு வந்து கூஜாவில் தண்ணிர் பிடித்துக் கொண்டிருந்தேன். அதுகாலை என்னைப்போல் இன்னொரு சிறுவன் இரண்டு கூஜாக்களுடன் இங்கே வந்தான். அவன் முதலில் ஒரு கூஜாவில் தண்ணீர் பிடித்துக் கீழே வைத்தான்; பிறகு இன்னொரு கூஜாவில் தண்ணீர் பிடித்தான். கடைசியில் கீழே வைத்த கூஜாவை மறந்து விட்டுக் கையிலிருந்த ஒரே கூஜாவுடன் அவன் தன்னைச் சேர்ந்தவர்கள் இருந்த பெட்டியை நோக்கி ஓட, அவனை நான் அவன் பெயர் தெரியாததால், 'டேய், கூஜா! கூஜா!’ என்று கத்தி அழைக்க, அதைக் கேட்டதும் அதோ போகிறவர்