பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

321

என்று விசில் அடித்தும், அவள் சினிமாவில் பாடிய பாடல்களையும் ஆடிய ஆடல்களையும் அவளுக்கு எதிர்த்தாற்போல் பாடிக் காட்டியும், ஆடிக் காட்டியும் தங்களுடைய உற்சாகத்தை வெளிப்படுத்த, 'இது வேறே தொல்லை எனக்கு! ஏ நாயர்! நீ ஓடிப்போய் டாக்டரைக் கூட்டிக் கொண்டு வா; நான் டார்லிங்கைக் காரிலேயே வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய்விடுகிறேன்!' என்று தன் ஆசை நாயுடன் அவசர அவசரமாகக் காரில் ஏறிக்கொண்டு, ‘ரசிக மகா ஜனங்களே, வணக்கம்!' என்று அவள் அவர்களை நோக்கிக் 'கடனே’ என்று கை கூப்பிவிட்டுச் செல்வாளாயினள்.

டாக்டர் வந்தார்; நாயைப் பார்த்தார்; 'இன்ஜக்‌ஷன்’ போட்டார். அப்போதும் அது குரைப்பதை நிறுத்தாமற் போகவே, 'இனி இதை ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு போகவேண்டும்' என்று டாக்டர் சொல்லிவிட்டுச் செல்ல, அப்படியே அந்த நாயை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் காட்ட, அதை அவர்கள் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, ‘இங்கேயே இரண்டு நாட்கள் இதை விட்டுவிட்டுப் போங்கள்!’ என்று சொல்ல, 'ஆ! என் டார்லிங்கைப் பிரிந்து நான் எப்படி இரண்டு நாட்கள் உயிர் வாழ்வேன்?' என்று நவஸ்ரீ 'கிளிசரைன்' இல்லாமலேயே கண்ணீர் விடுவாளாயினள்.

பார்த்தார் நாயர்; 'இனி ஒரே வழிதான் இருக்கிறது!’ என்று நாயையும் நடிகையையும் அழைத்துக் கொண்டு மிஸ்டர் விக்கிரமாதித்தர் வீட்டுக்கு வந்தார்.

விஷயத்தை கேட்ட விக்கிரமாதித்தர் விழுந்து விழுந்து சிரிக்க, ‘என்ன சிரிக்கிறீர்கள்?’ என்று நாயர் ஒன்றும் புரியாமல் கேட்க, 'கோளாறு எதுவும் நாயிடம் இல்லை; உங்களிடம்தான் இருக்கிறது' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, 'என்னக் கோளாறு?' என்று நாயர் கேட்க, 'ஐயப்பன் விரதத்துக்காக நீங்கள் அணிந்திருக்கும் கறுப்புச் சட்டையும்

மி.வி.க -21