பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏன்?

இதற்கு நான் பதில் சொல்வதைவிட, அமரர் கல்கி அவர்கள் இன்றல்ல– இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னாலேயே சொல்லி விட்டுச் சென்றதை இங்கே நினைவூட்டினாலே போதும் என்று நினைக்கிறேன். என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதியான ‘முல்லைக்கொடியாள்' என்ற நூலுக்கு முன்னுரை எழுதும்போது ஆசிரியர் கல்கி அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:

"விந்தன் கதைகளைப் படிப்பதென்றால் எனக்கு மனத்திலே பயம் உண்டாகும்..... அவருடைய கதா பாத்திரங்கள் அனுபவிக்கும் கஷ்ட நஷ்டங்களுக்கெல்லாம் நாம்தான் காரணமோ என்று எண்ணி எண்ணித் தூக்கமில்லாமல் தவிக்க நேரும்....!"

தம்மால் முடிந்தவரை பிறருக்கு நன்மை செய்வதையே தம்முடைய வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்த அந்த அரும் பெரும் உத்தமரையே என் கதைகள் அந்தப் பாடுபடுத்தின என்றால், மற்றவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

அத்தகைய அனுபவத்திற்குத் தெரிந்தோ தெரியாமலோ உள்ளான சிலர் 'மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைக'ளில் வரும் கதாபாத்திரங்களைத் தாங்கள்தான் என்று நினைத்துக் கொண்டு, இரவெல்லாம் நிஜமாகவே தூக்கமில்லாமல் தவித்திருக்கிறார்கள்; பொழுது விடிந்ததும் நிஜமாகவே அவர்கள் என்மேல் விழுந்து கடிக்கவும் வந்திருக்கிறார்கள்.

ஒருவிதத்தில் பார்க்கப் போனால் வேறு யாருக்கு நன்றி செலுத்தாவிட்டாலும் இவர்களுக்கு நான் அவசியம் நன்றி செலுத்தியே ஆக வேண்டும். ஏனெனில், "வாழ்க்கை-