பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

அரசுக்கு வழி காட்டிய தாயும் இந்தியாவே. எனவே இந்தியத் தாய்" நம் எல்லோருக்கும் தாய். ஆனல் அந்தப் பிள்ளைகள் தாய்க்கு நன்றி செலுத்தும் அறிவு இதுவரை பெறவில்லை.

இந்தச் சிறு புத்தகம், என் உள்ளத்திலே ஏற்பட்ட உணர்ச்சிகளேயும் தாகத்தையும் அவற்றைத் தணிக்கும் பொருட்டு நான் மேற்கொண்ட யாத்திரையையும் பற்றிக் கூறுவதாகும்.

சுவாமி விவேகானந்தரைப் போலவோ, டாக்டர் ராதாகிருஷ்ணனைப் போலவோ அழகிய ஆங்கிலத்தில் இந்திய வேதாந்த தத்துவங்களைச் சொல்லும் வல்லமை பெற்றேனில்லை. விளம்பரத்துக்காகவும் இதை எழுத வில்லை.

சங்கரர் தாம் வாழ்ந்த 32 ஆண்டுகளில் பன்னிரண்டு ஆண்டுகள் சிருங்கேரியில் வாழ்ந்தார். தொடர்ந்து நீண்டகாலம் அவர் வசித்த ஒரே இடம் இதுதான்.

பெயர் கேட்ட உடனே ஆன்மிக எண்ணங்களே எழுப்பக்கூடிய இடங்கள் சிலவே. சங்கரரரின் உள்ளம் கொள்ளே கொண்ட சிருங்கேரி அவற்றுள் மணியெனத் திகழ்கிறது.

ரிஷ்ய சிருங்கர், சங்கரர், சுரேஸ்வராசார்யர், வித்யா சங்கரர், பாரதி கிருஷ்ண தீர்த்தர், வித்யாரண்யர், சந்திரசேகர பாரதி முதலிய மாமுனிவர்கள் வாழ்ந்த இடம் சிருங்கேரி.