பக்கம்:மீனோட்டம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூசி 37 அவன் மைத்துனிதான் எதிர்ப்பட்டாள். அப்பொழுது ஒன்றும் தோன்றவில்லை. ஆயினும், இப்பொழுது நினைவில் அவளை வரவழைத்துக் கொள்கையில், அவளுடைய வெளுத்த சிவப்பும், கீழ் நோக்கிய சோகப் பார்வையில் தோன்றிய மெளனமான வரவேற்பும் சட்டெனப்படுகிறது. உள்ளே கூடத்து அறையுள் போனான். எல்லோரும் அவளைச் சுற்றிக் குழுமியிருந்தனர். 'மாப்பிள்ளை வந்து விட்டார்!- அவன் வருகை ஒரு சிறு பரப்பரப்பை உண் டாக்கியது. வந்துட்டேளா அவளைப் பார்த்ததும் திக் கென்றது. இந்த மூன்று நாட்களுக்குள் அடையாளமே மாறிவிட்டது. கண்களிலும், கன்னங்களிலும் நெற்றிப் பொட்டிலும் விழுந் திருக்கும் குழிகளைக் கண்டதும் முதுகுத் தண்டில் சில்? லென்றது. "இப்படி உட்காருங்கள்’ என்றாள், குரல் அவ்வளவு பலஹlனமாயில்லை. நான் என் ஆத்துக்காரருடன் பேசணும்; நீங்கள் எல்லோரும் போங்கோ-' - அவனையும் அவளையும் தவிர அறை காலி ஆயிற்று, அவள் விரல்கள் சும்மாயில்லை. மேற்போர்வையின் ஒரத்தைச் சீண்டிக் கொண்டேயிருந்தன. அவற்றின் மேல் பதிந்த பார்வையுடன், நான் திரும்பி வராத ஊருக்குப் போறேன். அதனால் போயிட்டுவரேன் என்று சொல்லிக் கிறதுக்கில்லை...' என்றாள். அவன் உள்ளம் நெகிழ்ந்தது. மூர்க்கத்தனமாய் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு, பைத்தியம் மாதிரி உள ராதே-’ என்றான், அவள் சிரிக்க முயன்றாள். 'எனக்குச் சிரிச்சாக்கூட வேதனையாயிருக்கு-ஆனால் எனக்கு நாடி இன்னி விடி காலையிலே விழுந்துடுத்து. கால் முழங்கால் வரை செத்துப் போயாச்சு- என்றாள். கண்களை உறுத்திக் கொண்டு கிளப்பும் கண்ணிரை அப்படியே உள்ளுக்கு அறைய வீணே முயன்றான். நல்ல கவளையாய் அவள் அவனைப் பார்க்கவில்லை. தன் விரல் ைேளயே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/38&oldid=870376" இலிருந்து மீள்விக்கப்பட்டது