பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 142 “முஷ்டி, உயர்த்திய கைகளில் சிலிர்த்து நிற்கும் உரோமத்தைப் போல மொட்டையாகி நின்ற மரங்களில் துளிர்த்து நின்ற இலைக் கொழுந்துகள் காட்சியளித்தன’’ (தாகம் - U.33) என்று மரத்தின் இலைக் கொழுந்துகளுக்கு முஷ்டியில் கானும் உரோமத்தை உவமிக்கிறார். 마 அரிசிச் சோற்றையே உண்டு பழகிய மக்களுக்குச் சோளப் பொரி சட்டென்று நினைவுக்கு வராது. ஆனால் கிராமத்தின் எளிய மக்களுக்கு அதுதானே உணவு. எனவேதான் வானவீதியைக் கண்ட பாட்டாளி வர்க்கப் படைப்பாளி பாரதியின் பார்வையில் 'பின்நிலவு வானில் சோளப் பொரியை வாரி இறைத்தது போன்ற நட்சத்திரக் கூட்டம்’ (தாகம் - ப. 67) என்று சித்திரிக்கும் விதத்தில் வெள்ளிகளின் சிதறல் கொண்ட ஆகாயம் சோளப் பொரியை வாரி இறைத்த வானமாகக் காட்சி தருகிறது. அரசாங்க ஜீப்பை கரடிக்கு ஒப்பிடுவது பொதுவாக புதுமையாகத் தோன்றக் கூடும். மலங்காட்டில் வாழும் பழங்குடிகள் நாள்தோறும் கரடிகளிடம் தொல்லை அனுபவிப்பதை எண்ணிப் பார்த்தால் அது புதுமையாகத் தோன்றாது. அவர்களுக்கு எமகிங்கரர்களாகத் தோன்றும் வனத்துறை அதிகாரிகளின் வாகனத்தை அவர்கள் கரடிக்கு ஒப்பிடுவது இயல்பானது என்பதால், பாரதி தம் நாவலில், 'அவனுக்கு (சாவித்திருமன் மகன் சாவிச் சடையனுக்கு) ஏதோ கேடுகாலம் வந்திருக் கிறது. இல்லாவிட்டால் அந்தக் கரடிக் காரிலிருந்து எமகிங்கரர்கள் போன்ற அந்த இருவர் எதற்காக வரவேண்டும்??? (சங்கம் - ப.2) என்றபடி ஜீப் காரை கரடிக்காராகக் குறிப்பிடுகிறார்.