பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 144 மற்ற வட்டாரத்துத் தாய்மார்கள் நச்சரிக்கும் பிள்ளைகளை எரிச்சல்பட்டு சீலைப்பேனுக்கு ஒப்பிட்டால், அந்த சீலைப்பேனை மலைவாழ் பழங்குடித் தாய்மார்கள் கொய்யாப்பழத்திலே நெளிகிற புழுவிற்கு ஒப்பிடு கின்றனர். மேகம் கவிந்து மழை பெய்கிற காலத்திலே மலைப்பகுதியிலே கொய்யாக் கனியிலும் மங்கை மேனியிலும் உற்பத்தியாகிற புழுவிற்கும் சீலைப் பேனிற்கும் தொடர்புபடுத்துவதாக அமைகிற உவமையில் மலைப்பகுதி மண்ணின் மணம் பரிமளிக்கிறது. 다. சமூகப் பிரக்ஞையுள்ள ஒரு படைப்பாளியின் எழுத்தாக்கத்தில் மூடத்தனத்தைச் சாடுகிற முனைப்பு இடம்பெறாமல் போகாது. அதற்காக அது தனித்துச் சொல்லப்பட்டால் வெறும் பிரச்சாரமாகி விடும். ஆனால் கதையினூடே உவமை உருவில் வரும்போது கலைநயம் பெற்று மெல்லிய பின்னணி இசையாக இழையோடிக் கொண்டிருக்கும். மூடநம்பிக்கை எனும் அறியாமை இருளினால் விதவைகளின் வாழ்வு ஒளி மங்கிக் கிடக்கிறது. இதைச் சித்திரிக்க, பாரதி, 'சூரிய ஒளியின் பிரகாசம் மங்கிக் கொண்டிருந்தது.... இலைகளும் கனிகளுமாக வளர்ந்து அடர்ந்த மரச்செறிவுகள் கருமை போர்த்த இருட்செறிவினால் சோகம் கப்பிய விதவைப் பெண்களைப் போலக் காட்சியளித்தன.” (சங்கம் - ப.109) என்ற சூரியாஸ்தமனத்தை விவரிப்பதன் மூலம் விதவையின் சோகத்திற்கு இருளை உவமிக்கிறார். 'ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் எனும் இசைத்தட்டு நிறுவனத்தினர் தங்களின் வர்த்தக இலச்சினையாக நாய் ஒன்று கிராமபோன் ஒலிபெருக்கி முன் காது கொடுத்து இசை கேட்பதுபோல அமர்ந்திருக்கும் காட்சியை அமைத்திருந்தனர். நன்றியறிவுள்ள நாய் தன் எஜமானனின் குரலை தன் காதுகளில் விழச்செய்ய ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்கும். அதன் ரசனையே அக்காட்சியின் ஜீவன். அதேபோல் நாயின் உணர்வுகளை அதன் காதுகள் மூலம்