பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 150 ஐம்பதுகளில் அறுபதுகளில் அவர்கள் பட்ட அவதிகள் வேதனைகள் அதிகம். அவற்றை அப்படியே படம்பிடித்துக் காட்டும் ஒர் அருமையான நாவல், மலையாள நாவல் பேராசிரியர். Cl அரிசனங்களும் ஆசிரியர்களும் இந்தியாவில் எங்கேயிருந்தாலும் ஒன்றுதான். மலையயாள நாவலான பேராசிரியர் தமிழகக் கல்லூரிப் பேராசிரியர்களின் நேற்றைய வாழ்வின் நிஜங்களைக் கலப்பிடமில்லாமல் சொல்லக் காரணம், அந்நாவலின் ஆசிரியர் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருந்து அல்லல்களை அனுபவித்தவர். குறைந்த ஊதியம், உத்தரவாதமற்ற நிலை, நிர்வாகத்தின் கொடுமை, அடக்குமுறை இவற்றையெல்லாம் நேரடியாகச் சந்தித்த அவர் பிற்காலத்தில் ஆசிரியர்களின் நிலையை உயர்த்தும் முற்போக்கான சட்டங்கொண்டு வருவார், கல்வி அமைச்சர் ஆவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் தான் ஜோசப் முண்டசேரி. கேரளத்தின் கல்வி அமைச்சராயிருந்த பேராசிரியர் முண்டசேரி எழுதிய "பேராசிரியர் நாவலை 1970 இல் சாகித்ய அக்காதெமி வெளியிட்டுள்ளது. (இந்திய ஒருமைப் பாட்டுக்கு உதவும், ஒருமைத் தன்மைகளைப் பிரதிபலிக்கும் படைப்புகளை வெளியிடும் நிறுவனத்தி லிருந்து இது வெளியிடப்பட்டிருப்பதால் இந்தியா முழுவதுமுள்ள ஆசிரியர்களின் அவலத்தை இந்த நாவல் உணர்த்துகிறது என்று நம்பலாம்) 'கல்லூரி வாழ்வைப் பற்றிக் குறிப்பிடத்தக்க செய்திகள் பலவற்றை அவர் சொல்ல வேண்டி யிருந்தது. அவற்றை அவர் ஒரு நாவல் வடிவில் சொல்லிவிட்டார்' என்று தகழி சிவசங்கர பிள்ளை இந்நாவலின் அணிந்துரையில் குறிப்பிடுகிறார். அவர் இந்நாவலை எழுதுவதற்குத் தொல்லைப் படவில்லை' (கஷ்டப்படவில்லை) என்கிறார்..... பேராசிரியராய் இருந்து தொல்லைப்பட்டுவிட்டது எவ்வளவு நல்லதாகப் போய் விட்டது! இந்நாவலில் வரும் பேராசிரியர் லோப்பஸ் ஒர் அறிவியல் பேராசிரியர், 'கற்றுக் கொடுப்பதில் கெட்டிக்காரர். பழகுவதற்கு நல்ல பக்குவமான மனிதர். கண்டதிலெல்லாம் தலையிடுகிற இயல்பு அவருக்கு இல்லை. கல்லூரிக்கு வருவதும், அங்கிருந்து திரும்பிப் போவதும் மிக ஒழுங்காக இருக்கும். பிறகு அஞ்சல்