பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீராகட்டுரைகள் : 26 "எமது எழுத்தாளர்கள் எத்துணைச் சமநிலை நோக்குடன் எழுதினாலும் அப்படைப்புக்களில் வரும் பாத்திரங் களுக்கும் எமக்கும் கால இடைவெளி மிகுதியாக உள்ளது. அவற்றுக்கும் எனது காலத்துக்கும் குறிப்பிடத் தக்க தொடர்வு காண்பது இயலாது” (அடியும் முடியும் - பக்.173) இப்படி சமகால இலக்கியத்தில் காலத்துக்கு ஒவ்வாத போக்குகள் காணப்படுவற்றகான காரணத்தையும் தேடுவோம். எங்கே? பழந்தமிழ் இலக்கியத்தில்தான். இங்கே பரந்த அளவில் அந்தத் தேடுதலை எடுத்துக்கொள்ள இடம் போதாது. எனவே ஒரு சில தலைப்புக்களில் முடித்துக்கொள்ளலாம். இன்றைக்குப் 'பெண்ணியம் பெரிதே பேசப்படுகிற காலம். பெண்ணியத்தின் பிரதிபலிப்பாக நம் காலம் வரை தொடப்பட்டு வந்துள்ள கதை அகலிகை கதை. அந்தக் கதை நெடுகிலும் இலக்கியங்களில் இடம்பெற்று வந்திருக்கிறது என்பதைவிட அதன் வேர், இன்றைய அது சம்பந்தப்பட்ட இலக்கியத்தின் வேர், பழந்தமிழ் இலக்கிய காலம் நோக்கி ஊடுருவிச் சென்றுள்ளதா, இன்று பொருள் கொள்கிற பெண்ணியச் சிந்தனைப்படி? என்பதே நம் ஆய்வுக்குரியதாகும். கலாநிதி கைலாசபதி விரிவான ஆய்வுக்கு இதனை உட்படுத்தியுள்ளார். அகலிகையை வான்மீகி இராமாயணத்தில் கல்லாக சபித்ததாக இல்லை. பரிபாடல் - 19இல் நப்பண்ணனர்தான் அகலிகை கல்லுருவாகச் சபிக்கப்பட்டதாக எழுதியுள்ளார். கெளதம முனிவருடன் வாழ்ந்த வாழ்க்கையில் அகலிகை உணர்ச்சியற்றுக் கல்லாகத்தான் இருந்தாள் என்பதையும் குறியீட்டு அடிப்படையில் உணர்த்தவே, வேறு ஏதாகவோ ஆகும் படி சபிக்காமல் கல்லாக ஆகும்படி சபித்ததாக உரைக்கப்பட்டுள்ளது. கெளதம முனிவருடன் அவளின் வாழ்வு சுகமானதல்ல சோகமானது என்பதற்கு எடுத்துக் காட்டு அவள் அவரை விரும்பியவளல்ல; அவள் ஏற்கெனவே இந்திரனை விரும்பியவளே!'ஸ்தபதப்பாஹ்மனத்தில் இந்திரனை 'அகலிகை காதலன்' என்றே சொல்லப்பட்டுள்ளது. இந்திரன் கெளதமுனிவர்போல மாற்று உருவத்தில் வருகிறான். அவனோடு கூடிய நிலையில் அவன் கணவனல்லன் எனத் தெரிந்தும் அவள் விலகவில்லை; இது அகலிகையைக் குற்றமற்றவள்,