பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 28 வக்காலத்து வாங்குவது, பெண்ணின் விடுதலை உணர்வுக்கு உரிய இத்தம் தருவது என்ற போதிலும் அந்த விடுதலையும்கூட ஆடவரான ஒரு ஆணின் மூலம் நிறைவேறச் செய்திருக்கிறார்கள். கற்பரசி என்று போற்றப்பட்ட சீதையின் கமலப்பாதம் பட்டதும் அகலிகை கல்லில் இருந்து விடுதலை பெற்றாள் என்று எழுதப்படவில்லை. என்றைக்கு பெண் தானே தன் விலங்குகளை உடைத்துக்கொண்டு எழுந்து நிற்கும் சக்தியைப் பெறுகிறாளோ அன்று கிடைக்கும் விடுதலையே நிரந்தரமானது. வரிசை வரிசையாய் அடிமைப்பட்டுக் கிடக்கும் அகலிகைகள் ஒவ்வொரு முறையும் இராமரை எங்கே போய்த் தேடுவது? ஆக அகலிகை பாத்திரத்தைப் படைத்தவர்கள் உணர்ச்சி உள்ள ஒரு பெண்ணின் பிரச்சினையை "சமுதாய அடிப்படையிலும் வரலாற்றியல் அடிப்படையிலும் நோக்காமையாலேயே இவற்றை ஒன்றுபடுத்திப் பார்க்கவும் மூலகாரணத்தைக் காணவும் இயலாதவராய் பிரச்சினைகளை அவ்வப்போது தோன்றும் தற்செயல் நிகழ்வுகளாய்க் கருதி எழுதுகின்றனர்' (அடியும் முடியும் ப. 191) - என்று மதிப்பிடுகிறார் கைலாசபதி, விரும்பியவனோடு கூட வாழ சுதந்திரம் இல்லாத நிலைமை அகலிகை மூலம் தெரிய வந்தும் அதற்கான சரியான காரணத்தைத் கண்டறியத் தவறியுள்ளனர். சமூகத்தில் ஏதோ ஒரு கால கட்டத்தில் பெண் உரிமை பறிக்கப்பட்டு, பெண் அடிமைத்தனம் புகுத்தப்பட்டதே காரணம் என்பது விளக்கப் படாமல், இதை விளங்கிக் கொள்வது சிரமம். பெண்களுக்கு சொத்துரிமை உள்ள சில செவ்விந்திய குலங் களை, குறிப்பாக வட அமெரிக்காவில் ஈரோக் குவிகள் (Iroguois) எனும் செவ்விந்தியக் குழுவினரை Morgan எனும் அமெரிக்க ஆய்வாளர் ஆய்வு செய்து Ancient Society எனும் நூலை எழுதினார். ஈரோக்க செவ்வியந்திய சமுதாயம் தாய் வழிச் g(pg|Tulongjib (Matriarchial Society) g)#EisSlair அடிப்படையில் பிரடரிக் எங்கல்ஸ் ' குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" எனும் ஆய்வு நூலை வெளியிட்டர். ஆக, இந்த