பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரம் ஒரு தொடர்நிலைச் செய்யுள் மட்டுமல்ல; சங்க இலக்கிய மரபைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் செய்யுளுங் கூட & 寧 'நீர்ப் படைக்காதை கொண்டு நிறுவுக இளங்கோவடிகள் சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்தவர். பற்று மூன்றையும் முற்றும் துறந்து பச்சைப் பசுந்தமிழ் மாட்டு மட்டும் பெரும்பற்று-பேராசை-வைத்து அவ்வாசத் துறவி சங்க இலக்கியச் சோலையில் இளைப்பாறியவர்; இனிமை கண்டவர். தமிழின் தனித்தன்மையைக் காட்டும் சங்க இலக்கிய மரபில் தம் மனத்தைப் பறிகொடுத்தவராதலால், அடிகள்.அம்மரபைப் பலவகையிலும் தழுவி தம் முதற்காப்பியத்தைப் படைத்தளித்துள்ளார். சங்க இலக்கிய மாளிகையில் தமக்கும் ஒர் இடம் பிடித்துக் கொண்ட சாத்தனாரே சங்க இலக்கிய மரபைவிட்டு விலகி நிற்கும் விதத்தில் தம் மணிமேகலையை யாத்துள்ளார். அடிகளோ, அம்மரபை அடிக்கு அடி பின்பற்ற வாய்ப்பில்லாவிட்டாலும் அடிக்கடி பின்பற்ற முயன்றுள்ளார். வென்றுள்ளார். சங்க இலக்கிய மரபின் காவல் நிலையான தொல்காப்பியம் 'காட்சி, கால்கோள் நீர்ப்படை நடுகல்' என்று வீரன் கல்லெடுப்புக்குக் கூறிய துறைகளை அடிகள் வஞ்சிக் காண்டத்தின் f குறுந்தொகை, நற்றிணை முதலிய சங்க நூல்களில் சாத்தனார் பாடியனவாகச் சில பாடல்கள் உள்ளன.