பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திரன் கவிதைகள் 1965 அக்டோபரில் வெளிவந்தது. அதை அப்போது தொகுத்தவர் சேந்திஉடையநாதபுரம் சீனிவாசன். சிவகங்கைக் கல்லூரி யில் பி.ஏ. இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தார். என் மாணவர். இராசேந்திரன் கவிதைகளுக்குப் பிறகு வந்த மூன்றும் ஆறும், கனவுகள், ஊசிகள், போன்றவை பல பதிப்புகள் கண்டுள்ளன. இடைக்காலத்தில் இராசேந்திரன் கவிதை மறுபதிப்பு வராமலேயே கிடந்தது. இது 2002. இப்போது 'மீராகவிதைகள்' என்று பெயர் மாற்றம் பெற்று வருகிறது. 1965 இல் தொகுப்பாசிரியராக இருந்த சேந்திஉடைய நாதபுரம் சீனிவாசன் சிவகங்கைக் கல்லூரியில் படித்து முடித்து, தியாகராசர் கல்லூரியில் தம்பி செயப்பிரகாசத்துடன் படித்து எம்.ஏ பட்டதாரி ஆகி என் தலைமையில் சிவகங்கைக் கல்லூரியில் விரிவுரையாள ராகச் சேர்ந்து முனைவர் பட்டமும் பெற்று சில மாதங்கள் தமிழ்த் துறைத் தலைவராகவும் விளங்கி நேற்று(மே 31) ஒய்வு பெற்று விட்டார். அவர் மாணவப் பருவத்திலிருந்து ஒய்வு பெறும் கால கட்டம் வரை கணக்குப் பாத்தால் 37 ஆண்டுகள். 37 ஆண்டுகளாக இராசேந்திரன் கவிதைகள் அல்லது மீரா கவிதைகள் மறுபதிப்பு வராததற்கு என்ன காரணம் என்று எனக்கே புரியவில்லை. கல்லூரிப் பணி, தலைமைப்பணி, முதல்வர் பொறுப்புப்பணி, கல்லூரிப் போராட்டப்பணி, தொழிற்சங்கப் பணி, கவி' இதழ்ப்பணி, அன்னம் விடு தூது இதழ்ப்பணி, அன்னம் பதிப்பக சிறப்பாசிரியர் பணி, அகரம் அச்சக மேற்பார்வைப் பணி, கொஞ்சம் குடும்பப் பணி - இவை எல்லாம் சேர்ந்து என் எழுத்துப் பணியை வளைத்துப் பிடித்துக் கட்டிப் போட்டு விட்டன என்று தான் சொல்ல வேண்டும். O 23