பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறகு அவருக்கே இதய நோய் வந்து அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது என்று தகவல் வந்தது. நான் நொந்து போனேன். கொஞ்சம் குணமானதும் மதுரை வந்து பேராசிரியர் பாப்பையா மகன் திருமணத்தில் கலந்து கொண்டிருந்து விட்டு சிவகங்கை வந்தார். நான் சென்னைக்குப் போய் அவரைப் பார்த்தது போய், அவர் சிவகங்கைக்கு வரும் நிலை ஏற்பட்டது. உடலைக் கெடுத்துக் கொண்டது குறித்துக் கடிந்து கொண்டார். 'சும்மா படுத்திருக்காதீர்கள். 'படியுங்கள், எழுதுங்கள் என்றார். புதிதாய் எழுதா விட்டாலும் எழுதி வைத்த கவிதைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டு வாருங்கள். 'இராசேந்திரன் கவிதைகளை மறுபதிப்புச் செய்யுங்கள் என்று சொல்லிச் சென்றார். இதே போல் கவிஞர் சிற்பியும் கவிஞர் பாலாவும் தம்பி சுபாஷ் சந்திர போசும் வரும்போதெல்லாம் சொல்வார்கள். இவர்களின் துண்டுதலால்தான் என் எழுத முடியாத கையால் கொஞ்சம் கொஞ்சம், தினம் தினம் எழுதி நூல்களை அச்சுக்குக் கொடுத்துவிட்டு இந்த முன்னுரையை எழுதுகிறேன். Ο 'இராசேந்திரன் கவிதைகள் நூலில் இடம் பெறாமல் இருந்த கையெழுத்துப் படிகள், பத்திரிகைப் பக்கங்கள் இவற்றைத் தேடி எடுத்து சலித்துப்புடைத்து விடு பட்டிருந்த சில நல்ல கவிதைகளை மீரா கவிதை களில் சேர்த்துள்ளேன். பிரிவினைக் கவிதைகளை எடுத்து விட்டு ஒருமைப்பாட்டுக் கவிதைகளை இணைத்துள்ளேன். பண்டித நேரு, முன்னாள் முதல்வர்.பக்தவத்சலம், கவியரசு கண்ணதாசன் போன்றோர் பற்றி எழுதிய வசைக் கவிதைகளை எடுத்துவிட்டு இசைக் கவிதைகளை மட்டும் இடம் பெறச் செய்துள்ளேன். 'திராவிட நாடு திராவிடருக்கே என்று எழுதிய நெடுங்கவிதையைப் போட்டு விட்டேன். இத்தொகுப்பில் அறிஞர் அண்ணா பற்றி தென்னரசு' இதழில் வெளிவந்த கவிதையும், அண்ணா சுவைத்து மகிழ்ந்து 'திராவிட நாட்டிலும் 'காஞ்சி'யிலும் 26