பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்ண நிலவே, வரவா? கன்னிப் பெண்ணின் கவின்நெற் றியைப்போல் முகிழ்த்து மேலும் முயன்று முயன்று வளர்ந்தே அவள்முக வடிவம் அடைகிறாய்; வண்ண நிலவே வா! வா இயற்கை அன்னையின் றெடுத்த அருமை மக்களுள் உன்னைப் பார்க்கையில் உவகை வளர்க்கிறேன். உன்னுடன் பிறந்தவன் உண்மையில் வஞ்சிக் குட்டுவன் போலக் கோபக் காரன்! இளங்கோ போல இருக்கிறாய் நீ தான் - இப்படிச் சொல்வதை இதம்தெரி யாமல் காலை வேலைக் கார னிடம்போய்ச் சொல்லி விடாதே; சுடுவான் என்னை என்ன நிலவே, எதற்குச் சிரிக்கிறாய்? திரைப்பட நடிகையைத் தெருவில் பார்த்ததும் முந்தி யடித்து மொய்த்துக் கொள்ளும் விசிறிகள் போல விண்மீன் கூட்டம் உன்னைப் பார்த்ததும் ஓடோடி வந்து கண்ணடிப் பதனைக் கண்டா சிரிக்கிறாய்? 50 0 மீரா கவிதைகள்