பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


எழுகின்ற ஆவியிலே வேவு பிடித்தல் தலையில் துணியைக் கட்டிக் கொண்டு முகத்தில் மட்டும் ஆவிபடுவதுபோல அங்கு ஏற்படுகிற வியர்வை முகத்தோலில் உள்ள நுண்ணிலையாக விளங்கும் துவாரங்களை (Pores) திறந்து விடுகிறது. அதனால் முகத்தோலிலுள்ள அழுக்குகள் நீங்கிப்பதமான சூட்டின் காரணமாக இதம் பெற்றுக் கொள்கிறது. பத்து நிமிடம் இவ்வாறு செய்கிறபோது முகத்தோலின் அழுக்கு நீங்கி, அழகு மெருகேறிய முகமாகக் காட்சியளிக்கிறது. பத்து நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணிரால் முகம் கழுவ, திறந்த நுண்துவாரங்கள் மூடிக் கொள்கின்றன.

2. சோப்பால் முகம் கழுவுதல் (Soap Washing)

சோப்பால் முகம் கழுவுதல், எளிமையான, அதே நேரத்தில் இனிமையான வேலைதான். ஆனால் உபயோகிக்கும் சோப்பை மிகவும் எச்சரிக்கையுடன் தேர்ந்து எடுக்க வேண்டும். ஏனென்றால், சில சோப்புக்கள் கடுமையான வீரியம் கொண்டதாகத் தயாரிக்கப்பட்டிருக்கும். அந்தச் சோப்பின் காரமானது, இயற்கையாகவே முகத்திலிருக்கும் எண்ணெய் பசையை அழித்து விட்டு, முகத்தோலின் நெகிழ்ச்சித் தன்மையையும். நீர்க்காப்புத் (Water Proof) தன்மையையும் பாதிப்பதுடன் ஒரு இறுக்கமானமுக அமைப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே, நீங்கள் தேர்வு செய்கிற சோப்பு நுரைவருகிற அளவுக்கு. முகத்தை கழுவுகிற தன்மையும், உங்கள் முகத்துக்கு நல்ல பொலிவை உண்டாக்கித் தருவதாகவும் இருக்க வேண்டும் என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்.