பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

71


கண்களுக்கு உள்ளே அடிப்பாகத்தில் கண்ணிர் சுரப்பிகள் இருக்கின்றன. அந்தச் சிறப்புச் சுரப்பிகளுக்கு உள்ள பெயர் லாக்கிரிமல் (Lacrmel). கண்களில் உள்ள கருவிகளைச் சுற்றிப் பாதுகாக்கும் இரும்புக் கோட்டையாக கண்ணிமை (Eyelash). அதற்கும் மேலாகப் புருவம் (Eye Brow).

ஏதாவது வெடிச்சத்தம் கேட்டாலோ, மின்னல் ஒளிபோல ஒளிக் கீற்றுப் பாய்ந்தாலோ, கண்ணிமைகளானது உடனே சிறுக மூடிக் கொண்டு. கருவிழியை, கண் உறுப்பை ஆபத்திலிருந்து தடுத்து விடுகிறது.

ஏதேனும், எப்பொழுதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே கண்ணிமையானது ஐந்து நொடிகளுக்கு ஒரு முறை கண்ணை மூடி மூடித்திறந்து இமைத்துக் கொண்டு இருக்கிறது.

கண் இமைப்பவர்களை மனிதர் என்றார்கள். கண் இமையாதவர்களைத் தேவர் என்றார்கள். அதாவது அவர்கள் இமையோர்.

இப்படி இரும்புக் கோட்டையாக விளங்கும். இமைகளையும் மீறி, தூசி விழிக்குள் விழுந்து விட்டால் அதைக் கரைத்து வெளியேற்றும் சக்தியைக் கொண்டதாகக் கண்ணீர் விளங்குகின்றது. மனத் துயரத்தால், மாறாத வேதனையால், ஒருமனம் வெதும்பிக் கதறுகிறபோது இந்தக் கண்ணீர்தான் வந்து, கண்களை நனைத்து அவர் படுகின்ற எரிச்சலைத் தணித்து, மனதுக்கு ஒரு ஆறுதலையும். வேதனைக்கு விடிவுகளையும் தருகிறது.