பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அனைத்திற்கும் காரணம் என்று நீங்களும் அறிந்திருப்பீர்கள். ஆசைதானே முனைப்பாகும் முன்னேற்ற நினைப்புக்கும், ஆற்றலின் இணைப்புக்கும், அதன் பின் பிணைப்புக்கும் முன்னேற்றத்திற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. எனவே, ஆசையில்லாத உயிரினம் ஏது?

வளமான வாழ்விற்கு, ‘வாயைக் கட்டு, வயிற்றைக்கட்டு’ என்பார்கள். வாயைக் கட்டு என்றால் அதைக் கயிற்றைப் போட்டுக் கட்டுவதா? இல்லை. கண்டதைத் தின்று, உண்டது செறிக்காமல், நோய்வாய்ப்பட்டு முடங்கிக்கிடந்து நொந்து போகாதே என்பதற்காகத்தான் வாயைக்கட்டு என்றார்கள்.

‘அற்றது அளவறிந்து உண்டால்’ நீண்டநாள் உயிர் வாழலாம் என்கிறார் திருவள்ளுவர். பசிதான் ருசி அறியும். ‘பசித்த பின் புசி’ என்பது பழமொழி. பசிக்காத நேரத்திலும். உணவு உண்பது பஞ்சமா பாதகம். உழைத்து அதன்பின் உண்டால் உணவும் செரிக்கும். உட்கார்ந்து இருந்து உண்டு கொண்டே இருந்தால் அஜீரணம், வயிற்றுக் கோளாறு, தலைவலி, மூலம், பெளத்திரம் என்று பற்பல நோய்கள் தொடர்ந்து தொற்றிக் கொள்ளும்.

சிலர் வாழ்வதற்காக உண்கிறார்கள். பலர் உண்பதற்காகவே வாழ்கிறார்கள். ஒருவேளை உண்பவன் யோகி. இருவேளை உண்பவன் போகி, மூன்று வேளையும் உண்பவன் ரோகி என்பார்கள். வாய்தான் இருக்கிறதே, வயிறுதான் இருக்கிறதே என்று எப்பொழுதும் எதையாவது தின்று கொண்டே