பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழையடி வாழை


1

தமிழ் ஒரு கவிதைப் பண்புள்ள மொழி;பாவலர் தம்

நாவிலே பண் வளர்த்த மொழி.உலகிலே கவிதை பாடு வதற்கு மிக எளிதில் வரும் மொழி தமிழ் ஒன்றுதான்!

ஆனல் அ, ஆ அறிந்தவரெல்லாம் அறிஞர்களாக

வும், க், கா தெரிந்தவர்களெல்லாம் கவிஞர்களாகவும் ஆக முடியுமா? உயர்ந்த கருத்துக்களின் ஊற்ருகி, மொழிப் புலமையின் கரைகண்டு, கவிதை அருவி பாய்வதன்ருே கவிஞன் உள்ளம்! சுருங்கச் சொன்னல் கவிதை பாடுவது குழந்தை பெறுவது போல. கருச் சிதையாமல் பிறக்க வேண்டும்; பிறந்த பிள்ளை கூன் குருடு நீங்கியதாக இருக்க வேண்டும்; இவன் தங்தை என்னேன் கொல்' என வையகம் வாழ்த்தவும் வேண்டும்.

  நாட்டன்பை அடகுவைத்து, மொழிப் புலமைக்கு முற்றுப் புள்ளி வைத்து, எண்ணியதெல்லாம் கருத்து, எழுதிய தெல்லாம் கவிதை யென்று கூறி, விலேபோகாக் கைச் சரக்கை வீதி வலம் வந்து விற்பதற்குப் பேரம் பேசு கிருர்கள் சில புதுமைக் கவிஞர்கள். புதுமைப் பித்தன் சொன்னதுபோல் மனைவி சோரம் போய்ப் பெற்ற பிள்ளே யைச் சொந்தப் பிள்ளையென்று கொண்டாடுபவர்கள் கவிதை உலகிற் பெருகிவிட்டார்கள். பிறர் கருத்தைத்