பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

ஒரு காக்கை பிடிக்கும் 'கவிஞர்' கூட்டம். செல்வாக்குள்ள வர்களின் சிறுமைக்குக் கட்டுப் படலாம்; பத்திரிகை ஆசிரியர்களின் விளம்பரப் பகட்டுக்குக் கட்டுப் படலாம்: இலக்கணத்திற்குமட்டும் கட்டுப்படக் கூடாதாம்! வால்ட் விட்மன் கூறியதிலே உள்ள உண்மையை இவர்கள் உணர வேண்டும். கவிஞன்தான் இலக்கணத்திற்குக் கட்டுப்படக் கூடாதே தவிர, கவிஞனுக்கு இலக்கணம் கட்டுப்படாமல் போய்விடக் கூடாது. இத் தகைய புது மைக் 'கவிஞர்' களைப் பார்த்து முடியரசன் பாடுகிருர்,

இலக்கணத்தைப் புதைத்து விட்டுக்

கூவுகின்ருர் ஒப்பாரிக் குரலெடுத்து'

என்று. இலக்கணத்தைக் கொன்றதோடு விடவில்லையாம் இவர்கள்; புதைத்து விட்டுப் பக்கத்திலேயே உட்கார்ந்து ஒப்பாரியும் வைக்கிருர்களாம் கவிதை' என்று! எவ்வளவு நியமான கண்டனம்! முடியரசன் பாடல்களே வெள்ளைக் கவிகளென நினைத்து, உள்ளத்தை மூடி வைத்து விட்டுப் புத்தகத்தைத் திறக்காதீர்கள். வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் நயம் உண்டு, கேலியும் கிண்டலும் உண்டு, உட் பொருளும் உண்டு. எனவே உணர்ந்து, நிறுத்தி, கின்று படிக்க வேண்டும்.

முடியரசன் தாமே தம் பாடல்களைப் படித்துக் காட் டும் போது குரலிலும், கவிதையிலும், உச்சரிப்பிலும் கம் பிரம் தவழும். அவர் தம் பாடற் கருத்தை விளக்கும் போது நயங்கூறுவார், சுவை கொள்வார். கவிஞன் முதல் தரச் சுவையறிஞனாகவும் இருத்தல் வேண்டும். தம் பாடல் களைத் தாமே திரும்பிப் பார்க்கக் கூசுவோரும் உண்டு,‘விசு வாமித்திரர் பரம்பரை'போல!