பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்த வருக !

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

கவிஞர் முடியரசனின் முதற் கவிதைத் தொகுதி தமிழ் இலக்கிய வானில் ஒரு முழுநிலவாக வெளிவந்தது. அதன் நலங்கண்டு சொக்கவெள்ளிப் பாற்குடழோ, அமுதவூற்ருே, காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக் கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ ' எனத் தமிழகம் மகிழ்ந்தது, பாராட்டுக்கள் குவிந்தன, வர வேற்புப் பெருகிற்று. இம் மகிழ்ச்சியிற் பிறந்த முயற்சி யின் விளைவால் இந்த இரண்டாங் தொகுதி மலர்ந் திருக்கிறது. o -

த்தொகுப்பில் உ ள் ள கவிதைகள் புதுமையும் பாலிவும் பெற்றவை ; கருத்தும் அமைப்பும் உடை யவை; தமிழ் மக்களின் அடிமைமனத்தை ஆழஉழுது பண்படுத்தும் திறமும் பெற்றவை. இத்தகு கவிதை களைச் சேர்த்துத் தொகுக்கும் பேறுபெற்றமைக்கு மகிழ்கிறேன். கவிஞருக்கு என் நன்றி, தமிழரின்

சார்பாக !

இக் கவிதைகள் பலஇதழ்களில் வெளிவந்தவை; பலர் மீது பாடியவை. காரைக்குடிக் கம்பன் திருநாள், தஞ்சாவூர்க் கம்பன் திருநாள், அழகப்பா கல்லூரி - இங்கெல்லாம் கவியரங்கேறிய பாடற்பகுதிகளும் இத் தொகுப்பில் உள.

திறய்ைவுப் பெரியார் திரு. V. R. M. செட்டியார், B.A., ஆ ங் கி ல மு ன் னு ைர தந்து இந் நூலுக்கு அணிசெய்திருக்கிருர். அவர்க்கு நம் நன்றி ! மற்றும், இந்நூல் உருவாகத் துணைகின்ருர் அனைவருக்கும் - கவிஞர் சார்பாக நன்றி கூறுகிறேன்.

உரம் இழந்த நிலம்போலத் தமிழ் நெஞ்சம் வளமிழந்து வாடுகையில் வாடிய பயிருக்கு வாய்த்ததோர் வான் மழைபோல் தோன்றிய கவிஞர் பரம்பரையிலே வந்த நம் புதுமைக் கவிஞர் முடியரசனை ' வாழ்த்த வருக ’ என ஆர்வத்தோடு அழைக்கிறேன். தமிழுலகை எதிர்நோக்கி !

தமிழண்ணல்

தொகுப்பாசிரியர்.