பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 பல்சுவை _ குறியெதிர்ப்பை என்பது அயல் வீட்டுப் பெண்களிடம் ஏதே னும் ஒரு பொருளை, திரும்பத் தருவதாக அளவிட்டு வாங்குவது. அஃதாவது ஒரு படி அரிசிதாருங்கள் இரண்டு நாளில் தருகிறேன்’ என்று இப்படி அளவு குறித்து வாங்குவது குறியெதிர்ப்பை எனப் படும். இவ்வாறு உதவியவராயினும் மற்ருேராயினும் வழங்குக; இவர் கட்கு இவ்வளவு கொடுக்கலாமா, இன்னவர்க்குக் கொடுக்கலாமா என்றெல்லாம் என்னைக் கலந்து ஆலோசிக்க வேண்டுவதில்லை. உன் விருப்பப்படி வழங்குக எனப் பெண்ணுரிமை வழங்குகிருர் புலவர். "வல்லாங்கு வாழ்தும் என்னுது என்ற பகுதிதான் புலவருள் ளத்தின் உச்ச நிலையைக் காட்டுகிறது. இவ்வளவு நாட்கள் வறு மையில் உழன்ருேம் : இப்பொழுது நிறையச் செல்வம் கிடைத் திருக்கிறது . இதைப் பேணி வைத்து வருங்காலத்தில் நலமாக வாழ்வோம் என்று கருதிப் பொருளை இறுகப்பிடிப்பது மகளிர் இயல்பு. ஆனல் புலவர் அவ்வாறு எண்ணுதே என்று சொல்கிருர். நாளைக்கு வேண்டும் என்று எண்ணுதே ; நாளையைப் பற்றிக் கவலையில்லை ; இன்று என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய். செல்வத்துப் பயனே ஈதல் ஆதலால் எல்லோர்க்கும் கொடு, கொடு என்று கூறுகின்ருர். நீயும் கொடு என்ற உம்மையினுல் நானும் கொடுப்பேன் என்ற கருத்துப் பெறப்படுகிறது. நாமென்ன பாடுபட்டா சம்பாதித்தோம் ; அவன் கொடுத்த செல்வந்தானே. அதனுல் தாராளமாகக் கொடு என்ற குறிப்பு குமணன் நல்கிய வளனே' என்பதால் தெரிய வருகிறது. 'மனை கிழவோய்’ என்பதனுல் வீட்டிற்கு உரியவள் நீதான்; ஆகவே எல்லோர்க்கும் வழங்கும் உரிமை உனக்குத் தான் உண்டு என்னுங் குறிப்பை உணர்த்துகின்ருர். இலக்கணம் நின்னயந்து-இரண்டாம் வேற்றுமைத் தொகை. (நின்-நயந்து) கடும்பசி-பண்புத்தொகை. *。 யாழ, மதி-இரண்டும் முன்னிலை அசைச் சொற்கள். சூழாது-எதிர்மறை வினையெச்சம். வாழ்தும்-எதிர்கால்த் தன்மைப் பன்மை வினைமுற்று. நீயும்-உம்மை எதிரது தழுவிய எச்சவும்மை. கிழவோய்-விளி துரங்கு முதிரம்-வினைத்தொகை வேற்குமணன்-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொ.க. வளன்-மொழியிறுதிப்போலி