உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்துார்வளம் Í 2 Í ஈங்கோய் மலையில் அஃறிணைப் பொருள்களும் இரக்கம் உடையன என்பது விளங்குகிறது. ** இப்பாடல் மயக்க அணி. மயக்க அணியாவது ஒப்புமையினலே ஒரு பொருளை மறருெரு பொருளாக அறிதல். இங்கு குரங்கு காந்தளை நெருப்பாகக் கருதி மயங்கியது. இலக்கணம் முதுமந்தி-பண்புத்தொகை. எழுந்துஎழுந்து-அ டுக்குத்தொடர். செஞ்சடை-பண்புத்தொகை. 2. திருச்செந்துார்ப் பிள்ளைத்தமிழ் திருச்செந்துாரில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் என்னும் நூல் எனப் பொருள்படும். பிள்ளைத் தமிழ் என்பது தமிழில் வழங்கும் தொண்ணுற்ருறு வகை நூல்களுள் ஒன்று. இஃது ஆண்பாற் பிள்ளைத் தமிழ்,. பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும். பாட்டுடைத் தலைவரைப் பிள்ளையாகக் கருதி, பிள்ளைகட்குரிய பருவ நிகழ்ச்சி களை அடிப்படையாக வைத்துப் பாடப்படுவது பிள்ளைத் தமிழாம். இது பத்துப் பருவங்களைக் கொண்டது. ஒரு பருவத்துக்குப் பத்துப் பாடலாக அமைந்திருக்கும். சில ள்ளேத்தமிழ் நூல் களில் பருவத்திற்கு ஐந்து பாடலும் உண்டு ஆண்பாற்பிள்ளைத் தமிழ் : காப்பு, செங்கீரை, தால், சப்பாணி முத்தம், வருகை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர், என்னும் பத்துப் பருவங்களே புடையது. பெண்பாற்பிள்ளைத் தமிழ் : மேற்கூறிய பருவங்களில் சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்னும் மூன்று பருவங்களை நீக்கிவிட்டுக் கழங்கு, அம்மானை, ஊசல் என்னும் மூன்று பருவங்களைச் சேர்த்துக் கூறுவது. திருச்செந்துார்ப் பிள்ளைத் தமிழின் ஆசிரியர் பகழிக் கூத்தர் என்னும் புலவராவர். இந் நூலில் வரும் பாடல்கள் சொற்சுவை, பொருட்சுவை நிரம்பப் பெற்றவையாகும், ஆசிரியரைப்பற்றி பெயர் : பகழிக் கூத்தர். ஊர் : சன்னசிக்கிராமம். (செம்பிய நாட்டைச் சார்ந்தது). தந்தை தர்ப்பாதன் என்பவர். சமயம் : வைணவம். வேறு நூல் : சீவக சிந்தாமணியைச் சுருக்கிப் பாடியிருப்ப தாகத் தெரிகிறது. நூல் இயற்றக் காரணம் : இவர் ஒரு சமயம் வயிற்று வலி நோயால் துன்புற்ருர். அப்பொழுது திருச்செந்துார் முருகனை வழி