உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பல்சுவை தமிழுக்கு : பொதிய ഥ്ഥിക്കു பிறத்தலும், சான்றேரால் புகழ்ந்து வணங்கப் படுதலும் உலகத்து அறியாமை இருளை அகற்றுதலுமாகக் கொள்க. கதிரவன் தேருக்கு ஒற்றைச் சக்காந்தான் உண்டு எனக் கூறு வர். இப்பாடலில் வேற்றுமை அணி அமைந்துள்ளது. வேற்றுமை அணியாவது உவமான உவமேயங்களாகிய இரண்டு பொருள்களுள் யாதேனும் ஒன்றைச் சிறப்புடையதாகச் சொல்வது. இப்பாடலில் தமிழாகிய உவமேயத்தையும், கதிரவனகிய உவமானத்தையும் ஒன்றுபடுத்திக் கூறிய ஆசிரியர், தமிழைக் கூறும் பொழுது தனக்கு ஒப்பில் லாத தமிழ் என்று கூறுகின்ருர். இதல்ை கதிரவனுக்கு ஒப்புச் சொல்ல உலகில் ஒரு பொருள் உண்டென்றும், தமிழுக்கு ஒப்புச் சொல்ல ஒரு பொருள் இல்லையென்றும் அறிகின்ருேம். ஆகவே கதிரவனை விடத் தமிழ் சிறப்புடைத்து என்பதாயிற்று. அதனுல் இது வேற்றுமை அணியின்பாற்படும். இலக்கணம் நீர்-தானி ஆகுபெயர். (இடத்திலுள்ள பெயர் இடத்தித் காயிற்று.) இலாத-இடைக்குறை, 2. தமிழ் மொழி தமிழ் மொழி, தமிழ்ப் புலவர் என்ற இரு தலைப்பிலும் வரும் பாடல்களிரண்டும் பாரதியார் கவிதைகள் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. ஆசிரியரைப்பற்றி : பெயர்: தேசியக் கவி சி. சுப்பிரமணிய பாரதியார். ஊர்: பாண்டிய நாட்டிலுள்ள எட்டையபுரம். தந்தை: சின்னசாமி ஐயர். தாய்: இலக்குமி அம்மாள். காலம்: தோற்றம்-1882. மறைவு-1921 செப்டம்பர் 11. இவர் மொழிப் பற்றும் நாட்டுப் பற்றும் வாய்ந்தவர். சுதந் திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்ச்சிகளை அடிப் படையாகக் கொண்டு பல பாடல்கள் இயற்றினர். இளமை யிலேயே பாடல் இயற்றும் வன்மை பெற்றிருந்தமையால் பாரதி' என்ற பட்டம் பெற்றனர். நாட்டு விடுதலைப்போரில் பேரார்வம் காட்டினர். கவிதைத் துறையில் புதுமையையும் புரட்சியையும் உண்டாக்கிப் புதிய கவிஞர் பரம்பரையைத் தோற்றுவித்தார். * சுதேசமித்திரன் பத்திரிகையில் துணையாசிரியராகப் பணி புரிந் தார். இந்தியா என்ற பத்திரிகையைத் தாமே நடத்திவந்தார். அரசியல் அடக்கு முறையால் புதுச்சேரியில் சில காலம் தங்கியிருந் தார். இறுதியில் திருவல்லிக்கேணியில் உயிர் জ্ঞpচ খnে.