144 பல்சுவை -=- _ ------ நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதொன்றுண்டு. யாதெனில் கட்டாயப்படுத்தி வற்புறுத்தி உன் மொழியைப் புகுத்தாதே! அவர்களாகவே விரும்பிப் பயில வேண்டும். அதற்கு எது வழியோ அதைச் செய் என்று நளினமாக ஆசை கொள்ளச் செய்' என் கிருர், இன்னுமொரு மொழித் தொண்டு உண்டு. தமிழின் அருமை யை வெளிநாட்டில் பரப்புவது போல் அந்நாட்டுக் கலைகளையும் நீ மொழி பெயர்த்துக் கொள். ஆயினும் அப்படியே உன் நாட்டுக் குள் நுழைய விடாதே என்பார் கமழ் மணத்தின் தமிழில் கட்டி வா’ என்றும் முன்னறிவிப்புச் செய்கிரு.ர். “நமது சொந்தம் இந்த நாடு’ என்று கூறி இளைஞர் உள்ளத் தில் நாட்டுப்பற்றை ஊட்டுகிருர். அந்நாடு நல்வாழ்வு கொள்ளச் சேவை செய்ய வேண்டுவது இளைஞர்கள் கடமைய்ாகும் என்று கூறி அதற்காகவே நீண்ட நாள வாழ்க என வாழ்த்தவும் செய் கிரு.ர். “மீளவும்” என்பதல்ை நம் நாடு முன்னர் நல்வாழ்வு வாழ்ந் திருந்தது என்பதையும் புலப்படுத்துகிருள். நாட்டுக்கு உழைப்ப்து தனக்குப் பயன் கருதியதாக இருததல் கூடாது என்பார் சேவை’ என்று கூறுகிருர், இலக்கணம் இலா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். நானிலம்-காரணப் பெயர் வாழ்க-வியங்கோள் வினைமுற்று.
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/148
தோற்றம்