146 பொதுச் செய்யுள் விவிைடை-வாழ்த்து 2. அருள் வேட்டல் 1. திரு. வி. க. இறைவனிடம் யாது சொல்லி முறையிடு - கின்ருர் ? - எங்கும் நிறைந்து, வித்துக்கும் வித்தாகி, மேலெழும்பும் முளைக்கு முளையாகி விளங்கிவரும் இறைவனே ! உன்னைத் தவிர வேருெரு பொருள் உலகில் எங்கும் இல்லை. உனையன்றி ஒரணு வும் அசையாது. அனைத்துயிர்க்கும் அன்னேயாகிய கடவுளே ! யான் உன்னை மறந்து எவ்வாறு உயிர்வாழ முடியும் ? என்று திரு. வி. க. இறைவனிடம் முறையிடுகின்ருர். o 2. இறைவன் இயல்பைத் திரு. வி. க. எவ்வாறு இயம்பு கிருர்? எல்லா வுலகங்களும் இனிது வாழ எங்கும் நீக்கமற நிறைந் திருக்கும் பரம்பொருள் என்றும் வித்துக்கும் வித்தாகி, முளைகட் கும் முளையாகி விளங்கும் தெய்வமென்றும் எந்த இடத்தும் அவனை யன்றி ஒரு பொருளும் இல்லை என்றும் ஒரணுவும் அவனில்லாமல் இயங்காது என்றும் எல்லாவுயிர்க்கும் தாயாக விளங்கும் இறை வன் என்றும் திரு. வி. க. இறைவன் இயல்பை இயம்புகின்ருர். 3. பிரித்தெழுதுக எவ்வுலகும்-எ-உலகு.--உம். எம்முளை-எ--முளை, 4. உறுப்பிலக்கணந்தருக : - உய்வேன்-உய்--வ்--ஏன். உய்-பகுதி, வ்-எதிர்கால இடை நிலை, ஏன்-தன்மை ஒருமை வினைமுற்று விகுதி. ஆ. தமிழ்மொழி வாழ்த்து 1. தமிழராகிய நாம் நையக் காரணங்கள் யாவை ? தமிழன்னைக்கு நாம் செய்யவேண்டிய பணிகள் யாவை ? தாய்மொழியாகிய தமிழ்மொழியின் நிலையைக் கண்டு அஃது உயர்வடைய முயலாமையாலும் பிறநாட்டு மொழிகளையே விரும்பிக் கற்று மகிழ்ந்தமையாலும் தமிழராகிய நாம் மனம் நொந்து வருந்தித் துன்புற்று மெலிந்தோம். தமிழன்னைக்கு நாம் செய்யவேண்டிய பணிகளாவன : நாம் கற்றுணர்ந்த பிறநாட்டுக் கலைகளைத் தமிழ் மொழியில் பெயர்த் துக் காட்டுதல். தமிழ் மொழியின் வளம் அனைத்தையும் எல்லாத் திசைகளிலும் சென்று விளக்கி வெற்றி முரசு கொட்டுதல், இவ் வாறு செய்து தமிழ்மொழி வாழிய வாழிய என வாழ்த்துதல்.
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/150
தோற்றம்