உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#68 பொதுச் செய்யுள் வி ைவிடை | 1. மனேன்மணியத்தில் கூறப்பட்ட மருதநிலவளத்தையும் நெய்தல் நிலவளத்தையும் சுருக்கி வரைக, - நெய்தல் நிலத்தில் உலர்த்தியிருக்கும் மீனைக்கவர வரும் வண் டானம் என்ற பறவையின்மேல் துளைச்சியர் தம் காதணியை எறிய அஃது அங்கே எருமைமேலிருந்து சிறகை உலர்த்திக்கொண் டிருக்கும் காக்கைக்குத் துயரம் தரும். தாழை மலரின் நிழலைத் தன் பெடையென்று கருதித் தாரா நெருங்கும். அதைக்கண்ட ஆம்பல் வாய் மலர்ந்து சிரிக்கும் அதன ருகில் நிற்கும் கோங் கமரம் மகரந்தப் பொடிகளைச் சிந்தி அதன் வாயை அடைக்கும் வெண்சங்குகள் ஈன்ற முத்துக்களை அன்னத்தின் முட்டை என்று கருதிப் பருந்துகள் கவர்ந்து சென்று அடம்புக் கொடிகளி னுரடே மறைத்துவைக்கும். கரும்பாலையிலிருந்து கிளம்பிய புகை நெய்தல் மலர்களே வாடச் செய்யும். அம்மலர்கள் குளிரும்படி எருமைகள் பாலைச் சொரியும். கலப்பை நுனி தாக்க அதனல் வருந்திய ஆமை, ஊடல் கொண்ட துளைச்சிய்ர் வழித்தெறிந்த குங்குமக் குழம்பிலே மறைந்து கொள்ளும். பரதவர் அடிக்கும் பறையொலி கேட்டு மருதமரங்களில் வாழும் அன்றிற் பறவைகள் உறங்கா. உப்பேற்றிய ஒடங்கள் நெற்பயிரின் அடியிலே கட்டப்பட்டிருக்கும். இரவும் பகலும் மாறி வந்தாலும் அங்கு மழை துப்பாது. ஆற் றுவிெள்ளமும் கடல் வெள்ளமும் இடைவிடாது மோதுவதால் கடல் நீர் ஒரு சமயம் இனிக்கும். மரக்கலம் ஒருசமயம் ஆற்றுள் சென்று வயலுக்கருகில் வரும். | கால்வாயில் மிக்கு வரும் வெள்ளம் மதகு பலகையை மோதிக் கடந்து செல்லும் இரைச்சல் ஒம் என்ற பிரணவ மந்திரத்தின் ஒலியை எழுப்பும். 2. நாஞ்சில் நாட்டிற் பறவைகள் முதலியவற்றின் தோற் றம் எவ்வாறு வருணிக்கப்படுகிறது ? வயல்களைக் கம்பளமாகக் கொண்டு, தாமரை மொட்டுக்களைப் புகையில்லாத விளக்குகளாகக் கொண்டு, முத்துக்களையும் சோவி களையும் பண்மாகக் கொண்டு, நண்டுகள் அவற்றை எண்ணிப் பார்க்கவும், அன்னம், கொக்கு, செம்போத்து, சம்பங்கோழி, நாரை, கர்ட்ை, பொய்யாப்புள், மீன்கொத்தி இவை போன்ற பறவைகள் கூடியிருந்து தலையசைத்தும் சிறகடித்தும் மாலை