பொதுச் செய்யுள் வினவிடை-இரட்டுற மொழிதல் 17: 2. சடையப்பரின் கொடைச் சிறப்பைப் பரராச சிங்கன் எவ்வாறு புகழ்கிருன்? புதுவையம்பதியில் வாழ்கிற சங்கரன் என்பவரின் மகளுகிய சடையப்பர் என்ற தரும தேவதை வாழ்கின்ற காரணத்தால் சோழ நாட்டு மக்களுக்கு இரவு பகலானல் என்ன ? பகல்-இரவரு ஞல் என்ன ? கதிரவன் திசை மாறினால் என்ன ? கடல் பொங்கி ல்ை என்ன ? வற்றினலென்ன ? அரசர்கள் இருந்தாலென்ன ? இறந்தாலென்ன ? ஒரு கவலையும் இல்லை என்று பரராச சிங்கன் சடையப்பரின் கொடைச் சிறப்பைப் புகழ்ந்து கூறுகின்ருன். 3. சோழமண்டலத்தின் வாழ்க்கைக்குக் காரணங்களாகப் பரராசன் கூறுவன யாவை? | சோழ மண்டலத்தின் நல்வாழ்வுக்குக் காரணம் சிவபெருமான் பொன்னம்பலத்தில் நின்று நடனமாடுவதும், திருமால் காவிரித் திருநதியில் (திருவரங்கத்தில்) பள்ளி கொண்டிருப்பதும் ஆகும் எனப் பரராச சிங்கன் கூறுகிருன். 4. இலக்கணக் குறிப்பு வரைக. இருள் அரு-ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். மா முகில் துயிலும்-உவமையாகு பெயர். ஆ. இரட்டுற மொழிதல் 1. பாம்பும் எலுமிச்சம்பழமும் 1. பாம்புக்கும் எலுமிச்சம்பழத்துக்கும் கூறிய சிலேடைப் பொருளை விளக்குக. பாம்பு (பெரியவிடமே சேரும்) மிகுத்த நஞ்சு பொருந்தியிருக் கும்; (பித்தர் முடி ஏறும்) பித்தளுகிய சிவன் முடியிற் பொருந்தி யிருக்கும் ; (அரி உண்ணும்) காற்றை உணவாகக் கொள்ளும் : (உப்பும்) உடம்பு பெருக்கும் : (மேல் ஆடும்) மேலெழுந்து படம் விரித்தாடும் ; (எரி குணமாம்) கோபக் குணமுடையதாகும். எலுமிச்சம் பழம் (பெரிய இடமே சேரும்) பெரியோர்கள் கையிற் கொடுக்கப்பெறும் ; (பித்தர் முடி ஏறம்) பித்துப் பிடித்த வர்களுடைய தலையில் தேய்க்கப்படும்; (அரியுண்ணும்) நறுக்கப் படும். (உப்பு மேலாடும்) உப்பு அதன்மேல் துவப்பெறும், (எரி குனம்ஆம்) அதன் சாறு எரிச்சல் உண்டாக்கும் தன்மையது.
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/175
தோற்றம்