பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பொதுச் செய்யுள் வினவிடை-தமிழும் தமிழரும் 4. தமிழர் சேமமுறப் பாரதியார் இடித்துக் கூறும் அறி வுரை யாது ? தமிழ்மக்களே ! ஊமையராய், செவிடர்களாய், குருடர்களாய் வாழ்கின்றீர். உங்கட்கு ஒன்று சொல்வேன் கேளுங்கள். இனி நீங்கள் இவ்வாறு வாழாமல் சேமமுற வேண்டுமானுல் தமிழகத் துத் தெருவெல்லாந் தமிழ் முழக்கஞ் செழிக்கும்படி செய்வீர்களாக என்று பாரதியார் அறிவுரை கூறுகின்ருர். 3. திருவள்ளுவர் 5. வையகம் புகழ்பெறக் காரணமாகப் பாரதிதாசன் கூறுவது யாது ? தெளிந்த தமிழ் நடையில் இரண்டடிப் பாக்களால் பயிலுந் தோறும் சுவையும் எண்ணுந்தோறும் உணர்வும் உண்டாகுமாறு, அறம், பொருள், இன்பம் முதலிய அனைத்தையும் திருக்குறள் நூலாகத்தந்த திருவள்ளுவரைப் பெற்ற காரணத்தால் வையகம் புகழ் பெற்றது என்று பாரதிதாசன் கூறுகின்ருர். 6. முப்பாலுக்கு இந்நிலத்தே இணையில்லாமைக்குக் கார னங்கள் யாவை திருவள்ளுவர் வாய் மலர்ந்தருளிய முப்பாலுள் வெற்றி பெருதது ஒன்றுமேயில்லே, தீயதும் இல்லை; குற்றமற்ற வாழ்வு நெறியிலே மக்களை அழைத்துச் செல்லாததும் ஒன்றுமில்லை; பொது மறையாகிய திருக்குறளிலே இல்லாதது எங்கும் இல்லை. ஆதலால் முப்பாலுக்கு இணையில்லே. 7. பாரதிதாசன் திருக்குறளின் பெருமையை எவ்வாறு கூறுகின்ருர் ? இவ் வினவிற்கு விடையாக ஆரும் வினவின் விடையையே தகுந்தவாறு அமைத்துக் கொள்க. 8. நாமக்கல் கவிஞர் தமிழ் மகனுக்குக் கூறும் அறிவுரை கள் யாவை ? o தமிழ் மகனே தமிழன் என்ற பெருமையுடன் தலை நிமிர்ந்து நில், உன் வரலாற்றை உலகமெங்கும் கொண்டு செல். அமிழ்தம் போன்ற தமிழ் மொழியின் ஒசை வானமுகட்டை முட்ட, உலகத்து மக்களெல்லாம் கண்டு விரும்பும்படி செய்து ஏனை நாட்டுக் கலை களையெல்லாம் தமிழில் மொழி பெயர்த்துத் தமிழர் வீட்டில் நிறைத்து, நமக்குச் சொந்தமான இந்த நாடு மீண்டும் நல்வாழ்வு பெறத் தொண்டு செய்து நீண்ட நாள் வாழ்க என்று நாமக்கல் கவிஞர் தமிழ் மகனுக்கு அறிவுரை கூறுகிருர்,