மாணவரும் தாய்மொழியும் 183 10. தாய்மொழிப் பயிற்சியால் விளையும் நன்மைகள் யாவை ? ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி ஏற்படுவதோடு, மாணவர்களுடைய மனம், ஒழுக்கம், மனவெழுச்சி முதலியவையும் பண்பட்டு வளர்ச்சி அடைய இடமுண்டு. மாணவர்களின் முழு வளர்ச்சிக்குத் தாய் மொழியே அடிப்படையானது என்னலாம். அதிலும் சிறப் பாகத் தாய்மொழியின் கண்ணுள்ள சிறந்த செய்யுட்களும் இலக்கியங்களுமே அவர்களின் மனவெழுச்சிகளைப் பண்படுத்தித் தனித் தன்மையை வளர்க்கும். 11. நல்லறிவு வளர என்ன செய்ய வேண்டும்? பல நூல்களையோ சில நூல்களையோ படிப்பதனுல் மட்டும் ஒருவர் அறிஞர் ஆகிவிடுவார் என்று எண்ணுவதற்கில்லை. படித்த நூல்களின் உண்மைக் கருத்துக்களை நன்குணர்ந்து, இவர் உள்ளத் தமைத்திருக்கின்றனரா? பொருள்களைப் பகுத்துணரும் அறிவும், ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றலும் இவர்பால் உண்டா? என்றும் ஆராயவேண்டும. அங்ங்னம் ஆராய்ந்து பார்த்தால், பல நூல் களை உள்ளத்தமையாது நுனிப்புல் மேய்வது போலக் கற்பதால் நல்லறிவு உண்டாகாது என்பதும், சில பொருள்களையேனும் திருத் தமாகக் கற்பதல்ை மட்டுமே நல்லறிவு வள ரு ம் என்பதும் புலப்படும். 12. கற்றலின் மிகச் சிறந்த நோக்கம் யாது ? உயர்ந்த ஆசிரியர்களால் எழுதப்பட்ட நூல்கள் தொட்ட னேத் துறும் மணற் கேணி போல இன்பமுறும் ஊற்றுக்களாம். இலக்கியங்கள் நம்முன்னேர்களாகிய தெய்வப் புலமைச் சான்ருேர் கள், தங்கள் வாழ்நாட்களில் பட்டறிந்து கண்டு வைத்த உண்மை களாகிய விலை மதிக்க வொண்ணு மணிகள் நிரப்பி வைத்திருக் கின்ற பொற்பேழைகளாம். இவற்றைப் பெற்று மகிழ்வது, அவர் கள் கால்வழியில் வந்த பிற்றை நாள் தலைமுறைகளின் தலையாய கடனுகும். இவற்றைப் பயின்று, இவற்றில் இலைமறை காய்களாய்ச் செறிந்து கிடக்கும் பொருள் நயங்களையும், இவற்றின் வெளித் தோற்றங்களாகிய சொல் நயங்களையும் கண்டுணர்ந்து சுவைத்து இன்புறுதலே கற்றலின் மிகச்சிறந்த நோக்கமாகும். 13. தாய்மொழிப் படிப்பால் விளையும் பயன்கள் யாவை? தாய்மொழிப் படிப்பு, ஒரு மாணவனுடைய நிலைத்ததும் ஆழ்ந்ததுமான ஈடுபாட்டைக் கல்வியிற் செலுத்தி, முறைப்படி ஒழுங்காக வேலை செய்தல், குறித்ததைக் குறித்த மொழியில் வெளியிடல், கலைத் துறைகளில் இறங்கி உழைத்தல் முதலிய நற் பழக்கங்களில் பயிற்சியையும் அளிக்கும் என்று மொழி முறை அறிந்த அறிஞர் உறுதியாக அறிதியிட்டுச் சாற்றுகின்றனர்.
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/187
தோற்றம்