உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இசைக்கருவிகள் 1/5 லாம் இது தளமாதலின் மத்தளம் என்ற பெயர் பெற்றது. சல்' என் னும் ஒளியுடைய காரணத்தால் சல்லிகை எனப் பெற்றது. உறுமல் ஒலியுடையது உறுமி பம்பம் என்ற ஒலியை எழுப்புவது பம்பை. முர் முர் என்று ஒலிப்பது முருடு, கரடி போல முழங்குவது கரடிகை. மொகு மொகு என ஒலிப்பது தமருகம். 6. எது வீர முரசம் எனப்படும்? அதன் அமைப்பு பெருமை இவற்றை எழுதுக. போரில் தோற்றுப்போன பகையரசனின் காவல் மரத்தை வெட்டி, அதனை முர்சமாக்கி வெற்றி முழக்கம் செய்வது வீர முரசமாகும். புலியொடு பொருது, அதனைத்தன் கொம்புகளாற் குத்திக் கொன்று, கொம்பில் மண்ணுடன் ப்ாய்ந்து சென்று உயிர்விட்ட காளேயின் மயிர் சீவாத தோலைப் போர்த்துச் செய்யப்படுவது மயிர்க்கண் முரசம் என்று நூல் கூறும். இதுவும் வீரமுரசத்தின் பாற்படும். அதன் பெருமையாவது :-பண்டைய வேந்தர் இம்முரசினத் தெய்வத்தன்மை யுடையதாகக் கருதினர். மலர் பர்ப்பிய தனிக் கட்டிலில் இதனை வைத்துச் சிறப்புச் செய்வர். நாடோறும் இசை முழக்கத்துடன் நீர்த்துறைக்கு எடுத்துச் சென்று நீராட்டி மாலை குட்டி வழிபடுவர். இதற்குப் பலியிடுவதும் உண்டு. 7. போர் முரசின் இயல்பு யாது ? போர் முரசு போர்க்களத்தில் வீரர்களுக்கு விரவெறியூட்டிப் புத்துணர்ச்சி யூட்டும். பம்பை, தடாரி, முருடு முதலிய் இசைக் கருவிகளுடன் சேர்ந்து முழங்கியதும் வீரர்களின் தலை சுழ்லும் , நரம்புகளெல்லாம் முறுக்கேறி நிற்கும்; போர் வெறி ஏறியவுடன் செருக்களம் நோக்கிப் புறப்படுவர். செருப்பறை கேட்டு விருப் புற்று மயங்கி நின்றுள் மறக்குடியிற்_பிறந்த மகள்' எனக் கூறுவ தாலும் போர் முரசின் இயல்பை அறியலாம். 8. தமிழகத்தின் நானிலங்களுக்கும் உரிய பறைகள் யாவை ? முல்லை நிலத்துக்குரிய பறை தடாரி. குறிஞ்சி நிலத்துக்குரி யது தொண்டகப்பறை, மருத நிலத்துக்குக் கின்ைப்பறை, நெய் தலுக்கு மீன் கோட் பறை. பகைவரிடமிருந்து ஆ நிரைகளைக் கவரும்போது வீரர்கள் முழக்குவது ஆ கோட் பறை எனப்படும். 9. துளைக் கருவிகளில் மிகப் பழைமையானது எது? அதை எவ்வாறு அமைத்தனர்? துளேக்கருவிகளில் மிகப் பழமையானது குழலேயாகும். எல்லா வாத்தியங்களிலும் குழலே முன்னதாகக் கூறப்படுகிறது. குழல் மு.-13