தமிழ்நாட்டின் சிறுதொழில் வளம் 305 - கக் கருதி, மற்றவற்றைப் பொருட்படுத்த மறந்து விடுவது தான் அங்குச் சிறு தொழில் நலிவுக்குக் காரணம் என்று கண்டனர். 7. நலிவுறும் சிறு தொழிலுக்கு அமெரிக்காவில் அளிக் கும் உதவிக்கு உதாரனந் தந்து விளக்குக. நலிவுறும் சிறு தொழில்களுக்கு அமெரிக்காவில் அளிக்கும் உதவி பெரிது. உதாரணமாக அங்குள்ள ஜெனரல் மோட்டார் கார்ப்பொரேஷன் இருபத்தாருயிரம் சிறு தொழிற்சாலைகளிலிருந்து சிறு பொருட்களேயும், கருவிகளையும் பெறுகிறது. இவைகளைப் பாதுகாத்துத் தகுந்த இலாபம் அளிக்கவும் உறுதியளித்துள்ளது. 8. அமெரிக்காவில் சில தொழிற்சாலைகள் எவ்வாறு தொழில்கள் செய்கின்றன ? நம் அரசினர் சிறு தொழிற்சாலைகளைப் பொருத்த வரை என்ன செய்ய வேண்டும் ? அமெரிக்காவில் நூற்றுக்கு எழுபது விழுக்காடு சிறு தொழிற் சாலைகள் ஒப்பந்தத் தொழில்களைச் செய்து வருகின்றன. எஞ்சிய முப்பது விழுக்காடு தொழிற்சாலைகளே வேறு தனித் தொழில்கள் செய்கின்றன. இத்தகைய ஒப்பந்தத் தொழில் நம் சிறு தொழில் களுக்குக் கிடைத்து நிலை பெறவும், அதன் உற்பத்தியில், போட்டி யினின்றும் சிறு தொழில்களைப் பாதுகாக்கவும் அரசினர் உதவ வேண்டும். ஒரு தொழில் ஒரே தொழிற்சாலை என்ற சட்டம் இயற்ற வேண்டும். 9. தமிழ் நாட்டில் பெருந் தொழிற்சாலைகள் தொடங்கா மைக்கு அரசினர் கூறும் பதிலென்ன ? "தோல்களைப் பொறுத்த வரையில் பொருள் செலவிட்டுப் பெருந் தொழில்கள் துவக்குவதற்குத் தமிழ்நாடு இடங் கொடுக்க வில்லை; வளம் போதாது. பெருந் தொழில்களுக்கு வேண்டிய நிலக்கரி, இரும்புக் கணிச் சேர்க்கை இங்கில்லை கிடைக்கும் நிலக் கரியின் தரமும் குறைவு. இரும்புக் கணியும் அவ்வாறே என்று விளக்கிப் பதிலளிக்கின்றனர். 10. பெருந் தொழில் தொடங்க இயலாதென்ற அரசி னரை நாம் கேட்க வேண்டியவை யாவை? நாம் கேட்க வேண்டிய தெல்லாம் பெருந் தொழில்களுக்குச் சென்னை மாகாணத்தில் வளமில்லையாயின் வேண்டாம். இறு தொழில்கள் வேண்டும். நூற்றுக்குக் குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு பிரிட்டனில் 42,000 தொழிற்சாலைகள் நடத்தப்படுகின் றன. அவற்றுள் இரும்பு நிறைந்த அளவில் தேவைப்படும் தொழில்களை நிறுத்தி வையுங்கள். மற்றும் தமிழ் நாட்டின் பொரு ளாதார, தட்ப வெப்ப நிலைக்கு ஒவ்வாது என்று தோன்றும் தொழில்களையும் ஒதுக்கி விடுங்கள். எஞ்சிய தொழில்களை ஆரம் பிக்க வழிசெய்யுங்கள் என்று தான் நாம் கேட்க வேண்டும்.
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/209
தோற்றம்