芝2I3 பொது உரைநடை விவிைடை வோர் பற்பலர். கையில் துலாக் கோலோடும் மரக்காலோடும் நின்று பண்டங்களே நின்ற விடத்திலேயே நிறுத்தும் அளந்தும் கொடுப்போர் பலர். சில கடைகளில் ஆடகப் பதம்பொன் விற்கப் படும் இங்கே சாம்பூருதம் விற்கப்படும் இங்கே சாதரும் விற்கப்படும் ' என்ற குறிப்புப்படி எழுதப்பட்ட கொடிகள் திக ழும். அதனுல் பொருள் வாங்குவோர் ஒவ்வொரு கடையிலும் புகுந்து திரும்பாமல் வேண்டிய கடையில் புகக் கூடிய வசதி செய் விட்டிருந்தது என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. 14. வஞ்சியைப் பற்றிச் சிலப்பதிகாரத்தில் அறியப் படு வன் யாவை ? வஞ்சி என்னும் நகரம் நானிலத்தின் பான்மையும் பொருந்தப் பெற்றது. குறித்தியர் பாடிய_குறஞ்சிப் பாட்டினையும் உழவர் -: இதைப் பாணியையும் இடையர் பாடிய குழலின் பாணியை யும் துகள்ச்சியர் பாடிய நெய்தற் பாணியையும் செங்குட்டுவன் :ஜனவி கேட்டனளாய்ப் படுக்கையில் இருந்தாள் என்று சிலப்பதி காரத்தில் கூறப்பட்டிருப்பதால் அந்நகரத்தில் மலேயும் து-ஆம் கானும் வயலு முண்டு என்பதும், அங்கு வாழ்ந்த மக்கள் வேட்டு வரும் உழவரும் இடையரும் பரதவரும் என்பதும், அந்நகரின் வெப்ப தட்ப நில்ை கலப்பு வாய்ந்தது என்பதும் அறியப்படும். மேலும் சிவனுக்கும் திரும்ாலுக்கும் கோவில்கள் இருந்தன என்றும் அறிகிருேம். 15. பண்டைத் தமிழரசருடைய தலைநகரங்களில் பிற நாட்டு ஒற்றர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை எதனு லறியலாம் ? சேரன் செங்குட்டுவன் வடநாடு புகுந்து வெற்றி கொள்ள வேண்டும் எனத் தன் அமைச்சனிடம் சொல்லவும், அவன் கண்ன இக்குக் கோயில் எடுக்க ஒரு கல்லிற்காகத்தானே போக வேண்டும், வட நாட்டு மன்னர்க்கு முடங்கல் அனுப்பினுல் வந்து விடும் என் முன் அப்பொழுது அழும்பில் வேள் என்ான் முடங்கல்_இதுை வேண்டா; இந்த ஊரில் பறையறைந்தாம் போதும், இவ்வூரின் கண் வட நாட்டு மன்னரின் ஒற்றராய் வந்திருப்போர் அறிவித்து இடுவர் என்று செங்குட்டுவனுக்குச் சொன்னதாகச் சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்திலுள்ளது. இதல்ை சேரருடைய தலைநகரத்தில் பிற வேந்தரத் ஒற்றர்கள் வந்து தங்கியிருந்தனர் என்பதை அறியலாம். 16. உப்பு வாணிகர் வாழ்க்கையைப் பற்றி, பெரும் பாணுற்றுப் படையால் அறியப்படுவது யாது ? உப்புவாணிகர் வண்டி நிறைய உப்பு மூட்டைகளை ஏற்றிப் பக்கத்து ஊருக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பர். அப்படிப் போகுங் கால் விண்டியில் பூட்டப்பட்ட எருது சோர்ந்தால் ஆட்டுதற்தி வேண்டும் என வேறு எருதுகளைத் தம்மோடு கொண்டு போவர்.
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/216
தோற்றம்