பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புக * 『ア ணிைச் செயலாற்றும் உறுதி பெற்று, இடன் அறிந்து, உரிய அறிவை யும், காலத்தில் முயற்சியையும் செலுத்தினல் உலகத்தையே பெறு வதாயினும் பெற்று விடலாம். ஞாலம் கருதினும் கை கூடும் காலம் கருதி இடத்தாற் செயின்' என்று வள்ளுவரும் கூறுகின் ரூர். அதல்ை உறுதி வேண்டுமென ஆசிரியர் கூறுகின்ருர். பள்ளிக்குழந்தைகள் எல்லாரும் எதிர்கால அரசராகவும் அரசி களாகவும் திகழ்வும், எல்லோரும் தங்கள் காலிலே நின்று செய லாற்றவும், அம்முறையிலே பயிற்றுவிக்கப் பெற்ருேருக்கும் மற்ளுே ருக்கும் உறுதி வேண்டும். 11. கல்வியினுல் ஏற்படும் பயன்கள் யாவை ? கல்வி கற்றவனிடம் வேற்றுமை தோன்ருது. இவன் கரியன்: இவன் வெள்ளையன் என்ற வேறுபாடு இருக்காது. இவன் தாழ்ந் தவன், இவன் உயர்ந்தவன் என்ற எண்ணமும் வராது. பிறர் வாழத் தான் வாழ்வான் தான் பெற்ற பொருளால் பிறரை வாழச் சய்வான். பிறர் துன்பங் கண்ட விடத்து அவர்கள் துன்பம் போக்கப் பாடுப்டுவான். இத்தகைய நல்ல பண்புகள் கல்வியால் ஏற்படும். 12. பொய்யா மொழி வற்புறுத்தும் நற்கருத்துக்கள் யாவை ? கல்வி கற்ற ஒருவனுக்கு எந்த நாடும் எந்த ஊரும் தனதே யாகும்; பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புக பிறிதொன்றனுடைய துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதி அதை நீக்க முயலாதவனு டைய அறிவிஞ்ல் ப்யன் ஒன்றுமில்லை என்பன பொய்யா மொழி யின் நற்கருத்துக்களாகும். 13. பசியால் விளையும் கொடுமைகள் யாவை ? பசி வந்திடப் பத்தும் பறந்து போகுமல்லவா? அதனுல் பாடம் ஏருது: கல்வியின் தரம் குறைந்து விடும். மேலும் அன்பும், நட்பும், உறவும் வளர்ந்து மகிழ வேண்டிய இளம் பிள்ளைகளின் உள்ளங்களில் பசியினல் வெறுப்புணர்ச்சியும், பொருமையுணர்வும் வளரும. 14. நம் நாட்டு மக்கள் எத்தகைய இயல்புடையவர்கள் நம் நாட்டு மக்கள் வருபவர்கட் கெல்லாம் வாரி வழங்கும் இயல்புடையவர். செல்வர்களேயன்றி ஏழை மக்களும் தம்ழிடம் இருப்பதைப் பகிர்ந்துண்டு வாழும் இயல்பினர். உண்ணும் நேரத் தில் ஏழ்ை ஒருவனின் குடிசையில் நுழைந்து விட்டால் பகிர்ந்துண் னும் பண்பை இன்றும் காணலாம். 15. பசிக் கொடுமையைப் போக்க என்ன செய்ய வேண் டும் ? பசிக் கொடுமையைப் போக்கும் முயற்சி பள்ளிகளிலிருந்தே தொடங்க வேண்டும். செல்வர்கள் அதற்குப் பொருளுதவி செய்ய o
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/221
தோற்றம்