பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் துறைகள் ジs 9 கண்ட பிறகு அவனை எங்ஙனம் மறந்து வாழ்வேன்? என்று தொண்டரடிப் பொடியாழ்வார் பாடுகிரு.ர். நகரம் எது ? அதன் முன்னைய நில்ை என்ன? காவிரி கடலொடு கலக்குமிடத்தில் இருந்த துறைமுக நகரம் காவிரிப்பூம்பட்டினம் என்பதாகும். கடற்கரையில் உள்ள நகரத் தைப் பட்டினம் என்று கூறுவது தமிழ் வழக்கு. கரிகாலன் என் னும் திருமாவளவன் இந்நகரத்தைத் திருத்தியமைத்தான், பெருக் கினன், தலைநகரமாக்கினன். ' குணகடலின் கோம்கள் என்று பிறநாட்டவரும் புகழும்படி ஏற்றமும் தோற்றமும் அளித்தான். அதனால் வாணிகம் பெருகிச் செல்வஞ் செழித்தது. கடல் வழியா கவும் தரைவழியாகவும் பலநாட்டுப் பொருள்களும் இங்கு வந்து குவிந்த வண்ணமிருந்தன. 7. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த நாகரிகச் சின்னம் எது? அதன் பொருள் என்ன ? இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த நாகரிகச் சின்னம் கலங்கரை விளக்கம் ஆகும். அதன் பொருள் கடலில் வரும் மரக்கலங்களைத் துறைமுகத்திற்கு அழைக் கும் விளக்கு என்பதாகும். 8. கடற்கரையிலிருந்த விளக்கிற்குத் தமிழர் இட்ட பெயர் யாது ? அதன் பொருள் என்ன ? இவ்வினவிற்கு ஏழாம் விளுவிற்குரிய விடையை ஏற்றவாறு மாற்றியமைத்து விடையாக்கிக் கொள்க. 9. காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்ற வாணி க ம் பற்றிச் சிலப்பதிகாரத்தில் அறியப்படுவது யாது ? துறைமுகத்தில் நாடோறும் வந்திறங்கும் பொருள்கள் நக ரத்து அங்காடிக்கு வந்து சேரும். அல்லும் பகலும் அங்கு வாணிகம் நடைபெறும். வாணிகம் நடைபெறும் அங்காடிகள் அல்லங்காடி என்றும் நாளங்காடி என்றும் இரு வகைப்படும் எனச் சிலம்பு கூறு கிறது. அங்காடி என்னும் சொல்லைத் தமிழர்களாகிய நாம் இன்று வழங்காமல் பசார் என்ற பாரசீகச் சொல்லையும், மார்க்கெட் என்ற ஆங்கிலச் சொல்லையும் வழங்கி வருகின்ருேம். 10. காவிரிப்பூம்பட்டினத்தைப் புலவர்கள் எப்பெயரால் போற்றினர் சேக்கிழார் எவ்வாறு போற்றுகிரும் ? காவிரிப்பூம் பட்டினத்தைப் புலவர்கள் பூம்புகார் என்று போற்றினர். காவிரி நீர் பாய்ந்து கடலையும் புனிதமாக்கும் பெருமை பொருந்திய தீர்த்தமாகும் நலம் சிறந்தது புகார் நக ரம் என்று சேக்கிழார் புகழ்ந்து பாடுகிருர்,