பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ジ。 இடைக்காலச் செய்யுள் விளக்கம் சாதுவன் உயிரோடிருத்தலிலுைம், ஆதிரை கற்புடையாளா தலாலும், நெருப்பு அவளே அணுகவில்லை. அதனல் வருந்த வேண்டா என்று அசரீரி கூறியது. இலக்கணம் கொல்லா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். செய்கேன்-தன்மை ஒருமை வினைமுற்று. செய்-கு-ஏன். ஆதிரை-அண்மை = அரும் பெறல்-பெறல் அரும் என்பது முன் பின்னக மாறி நின்றது. ஆங்கு-அசைகிலே. ஊர் திரை, வாழ் மலை-வினைத்தொகைகள். சேர்ந்தனன்-படர்க்கை ஆண்பால் வினைமுற்று. சேர்-த்-த் --அன்-அன் 11. இடைக்காலச் செய்யுள் அ. கம்ப ராமாயணம் சுந்தர காண்டம் உருக்காட்டு படலம் கம்பராமாயணம் பற்றிய குறிப்புக்கள் பொதுப்பகுதியில் தரப் பட்டுள்ளன. கண்டு கொள்க. சுந்தர காண்டம்-அழகிய பகுதி. இஃது அருமனுடைய பெரு மையை நன்கு விளக்குவதாகி அழகியதாக இருத்தலால் இப்பெயர் பெற்றது என்பர். அதுமனுக்குச் சுந்தரன் என்று ஒரு பெயருண்மை யால் அவன் செயலேக் கூறும் பாகம் என்றும் சொல்வர். சிறை யிருந்த சீதையின் ஏற்றம் (கற்பின் அழகு) கூறுதலால் இப்பெயர் பெற்றது என்றும் சொல்லுவர். ஏனேய் காண்டங்களினும் இக் தாண்டத்துக் கதை நிகழ்ச்சி அழகியதாக இருத்தலினல் இப்பெய்ர் பெற்றது என்றும் சொல்வர். உருக்காட்டு படலம்-அதுமன் அசோக வனத்தில் சீதையின் அருகிற் இசன்று தனது வடிவத்தைக் காட்டி இராமனது செய் தியைத் தெவித்துத் தனது பெரிய உருவத்தையும் காண்பித்த வரலாற்றைக் கூறும் பகுதி.