உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. இடைக்காலச் செய்யுள் இதுவும் அது வான்பெற்ற நதி............. .................பெற்ருரே சொற்பொருள் வான்பெற்ற நதி கமழ் - வான நதியாகிய கங்கை மணம் கமழ்கின்ற, தாள் வணங்கப் திருவடிகளை வணங்கும் பெற்றேன், மதி பெற்ற திருவுளத்தால் - அறிவு நிறைந்த உன் மனத் தாலே, மதிக்கப் பெற்றேன் - மதிக்கும் படியான நற்பேறும் பெற் றேன், தேன் பெற்ற துழாய் அலங்கல் - தேன் நிறைந்த திருத் துழாய் பேறு பெற்றேன் - தீண்டப் பெற்றேன் - தொடு கின்ற பேறும் பெற்றேன், ஊன் பெற்ற பகழியினல் - ஊன் பொருந்திய அம்பினல், அழிந்து வீழ்ந்தும் - உடலெல் லாம் சிதைந்து வீழ்ந்துங்கூட, உணர்வுடன் - நல்லுணர்வோடு, நின் திருநாமம் உரைக்கப் பெற் றேன் - உன்னுடைய திருப் பெயரைச் சொல்லும் நில்ை யைப் பெற்றேன், யான் பெற்ற பெரும் தவப்பேறுயான் அடைந்த, பெரிய தவப் பயனை, மாலையும், என்னை அன்றி - என்னைத் தவிர, களபம் - சந்தனக் குழம்பும் இரு நிலத்தில் பிறந்தோரில் (பொருந்திய), பெரிய உலகத்தில் பிறந்தவர் மார்பும் திருப்புயமும் - மார்பை களுக்குள், யும் அழகிய தோள்களையும், யார் பெற்ருர் - எவர் பெற்றுள் தைவந்து - தடவி, ளார் ? (ஒருவரும் இல்லை). o கருத்து உன்னுடைய திருவடிகளை வணங்கப் பெற்றேன்; உன்னல் நன்கு மதிக்கப்பட்டேன்; உன் மார்பையும் தோள்களையும் தொட் டுனர்ந்தேன்; அம்பு பட்டுத் தளர்ந்து வீழ்ந்தும் உன் திருப்பெயரை ஒதப் பெற்றேன்! இத்தகைய பெரும் பேற்றை என்னைத்தவிர இவ் வுலகில் யார் பெற்றுள்ளார் ? என்று கன்னன் கூறினன். - விளக்கம் முன்பு ஒரு சமயம் திருமால் திருவிக்கிரமாவதாரம் எடுத்து நிலத்தை ஒரடியாலும் வானத்தை ஒரடியாலும் அளக்கும்போது வானத்தை நோக்கிச் சென்ற திருவடியைச் சிவபெருமான் நீர் வார்த்து மலர் தூவி வழிபட்டார். அந்நீரே கங்கையாகப் பூமியில் பாய்ந்தது என்பர். அக்கதையை உட்கொண்டு வான் பெற்ற நதி கமழ்தாள் எனப்பட்டது. முன்பு கன்னன் இல்லை என்னத இதயம் வேண்டும் என்று கூறலும் கண்ணன் அவனைக் கைத்தல மலரால் மார்புறத் தழுவி ன்ை. அதல்ை மார்பும் திருப்புயமும் தீண்டப்பெற்றேன்’ என்று கூறுகிருன்.